வீடு / சமையல் குறிப்பு / கோதுமை அல்வா

Photo of Wheat halwa by Saivardhini Badrinarayanan at BetterButter
640
2
0.0(0)
0

கோதுமை அல்வா

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கோதுமை அல்வா செய்முறை பற்றி

சுவையான அல்வா

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு 1 கப்
  2. சக்கரை 3 கப்
  3. ரெட் உணவு கலர் 2 சிட்டிகை
  4. நெய் 1/2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் கோதுமை மாவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசையவும்..
  2. பின் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் சேர்த்து பிசைந்த மாவு சேர்த்து ஊற வைக்கவும்.
  3. பின் 3 மணி நேரம் கழித்து ஊற வைத்த நீருடன் மாவை பிசையவும்.
  4. பின் நீருடன் மாவு நன்கு கலந்து பின் வடிகட்டி கோதுமை பால் மட்டும் தனியே எடுக்கவும்.
  5. பின் ஒரு கடாயில் நெய் முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுக்கவும்.பின் வடிகட்டிய கோதுமை பால் சேர்த்து கை விடாமல் மிதமான சூட்டில் கிளறவும்.
  6. 10 நிமிடம் கழித்து பால் கஞ்சி நிலைக்கு வரும் போது சக்கரை சேர்த்து கிளறவும்.
  7. பின் ரெட் உணவு கலரை 1 மேஜைக்கரண்டி நீரில் கரைத்து கடாயில் சேர்க்கவும்.
  8. பின் சக்கரை கரைந்த பின் இடை வேலை விட்டு விட்டு 2 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கை விடாமல் கிளறவும்.
  9. பின் வறுத்த முந்திரி சேர்க்கவும்.
  10. பின் சேர்த்த நெய் அனைத்தும் பிரிஞ்சி வரும் நிலையில் தீயை அணைக்கவும்.
  11. பின் ஒரு தட்டில் நெய் தடவி அல்வாவை தட்டில் கொட்டி சமம் செய்து சூடு ஆறியவுடன் வில்லைகள் போடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்