Photo of Poha fritters by Saivardhini Badrinarayanan at BetterButter
293
2
0.0(0)
0

அவுள் வடை

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவுள் வடை செய்முறை பற்றி

சுவையான மிகவும் எளிமையான நறுக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவுள் 1 கப்
  2. உளுந்து 1/2 கப்
  3. தயிர் 1/4 கப்
  4. பச்சைமிளகாய் 2
  5. வெங்காயம் 1
  6. இஞ்சி துருவல் 1 மேஜைக்கரண்டி
  7. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  8. கறிவேப்பிலை
  9. கொத்துமல்லி இலை
  10. உப்பு
  11. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் உளுந்தை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் ஒரு மிக்ஸியில் ஊற வைத்த உளுந்து, அவுள், தயிர் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  3. பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது , பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி துருவல், கொத்துமல்லி இலை, கருவேப்பிலை, ஜீரகம் ,உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  4. கையில் எண்ணெய் தடவி சிறிய உரண்டைகளாக பிடித்து வடை போல் தட்டி வைக்கவும்.
  5. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் ஒவொன்றாக போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்