Photo of Sweet Poha by Krishnasamy Vidya Valli at BetterButter
372
2
0.0(0)
0

வெல்ல அவல்

Apr-25-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெல்ல அவல் செய்முறை பற்றி

வீட்டில் திடீரென வரும் விருந்தாளிகளுக்கு செய்யப்படும் எளிமையான இனிப்பு வகை இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவல் -1 கப்
  2. வெல்லம் -3/4 கப்
  3. நெய் -2 தேக்கரண்டி
  4. தேங்காய் துருவல் -2 தேக்கரண்டி
  5. ஏலப்பொடி -2 சிட்டிகை
  6. முந்திரி பருப்பு -10 (விருப்பப்பட்டால்)

வழிமுறைகள்

  1. அவலை களைந்து பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். கெட்டி அவலாக இருந்தால் சிறிது தண்ணீர் விட்டு அரைமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்
  2. வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  3. விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளவும்
  4. வெல்லம் பச்ச வாசனை போனவுடன் அவல் ஏலப்பொடி தேங்காய் துருவல் ஒரு தேக்கரண்டி நெய் எல்லாம் சேர்த்து கிளறவும்
  5. மீதமுள்ள நெய்யில் முந்திரி வறுத்து சேர்க்கவும்
  6. வெல்ல அவல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்