Photo of Sweet greengram by Krishnasamy Vidya Valli at BetterButter
431
2
0.0(0)
0

வெல்ல பயறு

Apr-25-2018
Krishnasamy Vidya Valli
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெல்ல பயறு செய்முறை பற்றி

ஆரோக்யமான இனிப்பு வைரைட்டி. குழந்தை பிறந்த 11வது நாள் தொட்டிலில் இடும் அன்று இந்த இனிப்பு செய்வார்கள். அதிகமாக வெல்லம் (பயறு 1 பங்கு என்றால் வெல்லம் 2 பங்கு) சேர்த்து குழைவாக செய்வார்கள். ஆனால் இதில் இனிப்பு சற்று குறைவாக அதிகம் குழையாமல் சிறிது கடித்து சாப்பிடுவது போல் செய்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்ச பயறு -1 கப்
  2. வெல்லம் -3/4 கப்
  3. நெய் -2 தேக்கரண்டி
  4. தேங்காய் துருவல் -2 தேக்கரண்டி
  5. ஏலப்பொடி -2 சிட்டிகை
  6. முந்திரி பருப்பு -10

வழிமுறைகள்

  1. பச்ச பயிறை வெறும் கடாயில் வறுத்து நான்கு மணிநேரம் ஊற வைக்கவும்
  2. குக்கரில் அளவாக தண்ணீர் விட்டு ஒரு விசில் வேக வைத்து எடுக்கவும்.
  3. வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  4. விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளவும்
  5. பச்ச வாசனை போனபிறகு ,வெல்ல கரைசல் சிறிது கெட்டியாகும் நேரத்தில் வேக வைத்த பயறு தேங்காய் துருவல் ஒரு தேக்கரண்டி நெய் ஏலப்பொடி சேர்த்து கிளறவும்
  6. மீதமுள்ள நெய்யில் முந்திரி பருப்பு வறுத்து சேர்க்கவும்
  7. வெல்ல பயறு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்