வீடு / சமையல் குறிப்பு / கோதுமை மாவு பழ அப்பம்

Photo of Wheat flour banana appam by Krishnasamy Vidya Valli at BetterButter
513
3
0.0(0)
0

கோதுமை மாவு பழ அப்பம்

Apr-26-2018
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கோதுமை மாவு பழ அப்பம் செய்முறை பற்றி

இனிப்பு குழிப்பணியாரத்திற்கு ஒரு மாற்று இது. செய்வது சுலபம். ஒருவருக்கு மூன்று வீதம் ஆறு பேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கோதுமை மாவு -1 கப்
  2. வெல்லம் -3/4 கப்
  3. நன்றாக பழுத்த பழம் -1
  4. தேங்காய் துருவல் -2 தேக்கரண்டி
  5. நெய் -2 தேக்கரண்டி
  6. ஏலப்பொடி -2 சிட்டிகை
  7. முந்திரி கிஸ்மிஸ் -தலா -10(விருப்பப்பட்டால்)
  8. பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு நெய்/எண்ணெய்

வழிமுறைகள்

  1. வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்(வெல்லம் நன்றாக கரைவதற்கு)
  2. விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் வெல்லகரைசல் கோதுமை மாவு தேங்காய் துருவல் பழம் ஏலப்பொடி சேர்த்து நான்கு கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
  4. இந்த கரைசலை அப்படியே இருபது முதல் முப்பது நிமிடங்கள் வரை ஊறவிடவும்
  5. நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் வறுத்து அப்படியே நெய்யோடு செய்து வைத்த கரைசலில் சேர்க்கவும்
  6. அப்பக்காரை/குழிப்பணியாரக்கடாய் -ல் எண்ணெய்/நெய் விட்டு செய்துவைத்த மாவை விட்டு பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்