வீடு / சமையல் குறிப்பு / கேரமல் பிஸ்கட் புட்டிங்

Photo of Caramelized Biscuit Pudding by Ayesha Ziana at BetterButter
286
6
0.0(0)
0

கேரமல் பிஸ்கட் புட்டிங்

Apr-26-2018
Ayesha Ziana
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
55 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரமல் பிஸ்கட் புட்டிங் செய்முறை பற்றி

பிஸ்கட்களை வைத்து செய்த சூப்பரான கேரமல் புட்டிங்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் 500 மில்லி
  2. முட்டை 4
  3. பிஸ்கட் 12(மில்க் பிக்கீஸ் அல்லது விருப்பமான)
  4. சீனி 1/4 கப்
  5. கேரமல் செய்ய: சீனி 4 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலைக் காய்ச்சி பிஸ்கட்களை அதில் போட்டு 15 முதல் 30 நிமிடங்கள் ஊற விடவும். பின் இந்தக் கலவையை மிக்ஸியில் நன்றாக அரைத்து ஒரு பவுலில் ஊற்றவும்.
  2. பின்னர் மிக்ஸியில் முட்டை மற்றும் சீனியும் சேர்த்து அரைத்து அந்த பவுலில் ஊற்றி, நன்றாக கலந்து வைக்கவும்.
  3. கேரமல் செய்ய: புட்டிங் செய்யப்போகும் பாத்திரத்தில் சீனி சேர்த்து சிம்மில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும். 3-4 நிமிடங்கள் ஆனதும் ப்ரவுன் நிறத்தில் கேரமல் தயாராகும். பாத்திரத்தை அடுப்பில் இருந்து எடுத்து உடனே மிக வேகமாக கேரமல் எல்லா இடங்களிலும் படும்படி சுழற்றவும்.
  4. 1-2 நிமிடங்கள் ஆனதும் புட்டிங் கலவையை கேரமல் மேல் ஊற்றி, பாத்திரத்தை இட்லிப்பானையில் வைத்து சிம்மில் 45 நிமிடங்கள் ஆவியில் அவித்து எடுக்கவும்.
  5. பின்னர், பாத்திரத்தை வெளியில் எடுத்து, ஆறியதும், கத்தியால் ஓரத்தை இளக்கி, ஒரு தட்டில் கவனமாக கவிழ்க்கவும்.
  6. சூப்பரான பிஸ்கட் புட்டிங் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்