Photo of Rawa dosa and palya by Anandhi Anand at BetterButter
295
23
0.0(0)
1

ரவா தோசை

Apr-23-2016
Anandhi Anand
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 பெரிய உருளைக்கிழங்கு, வேகவைத்து தோல் உரிக்கப்பட்டது
  2. 1 சிறிய அளவுள்ள வெங்காயம், பொடியாக நறுக்கப்பட்டது
  3. 1 சிறிய அளவுள்ள தக்காளி, நறுக்கப்பட்டது
  4. 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கப்பட்டது
  5. 1 இன்ச் துண்டு இஞ்சி, பொடியாக நறுக்கப்பட்டது
  6. 2-3 பற்கள் பூண்டு நசுக்கப்பட்டது
  7. கொஞ்சம் கொத்துமல்லியும் கறிவேப்பிலையும்
  8. 1 தேக்கரண்டி எண்ணெய்
  9. கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஒவ்வொன்றும் 1 தேக்கரண்டி, தாளிப்புக்கு
  10. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  11. சுவைக்கேற்ற உப்பு
  12. அரைப்பதற்கு:
  13. 1 தேக்கரண்டி புதிய தேங்காய்
  14. 1 தேக்கரண்டி சோம்பு
  15. 1 தேக்கரண்டி அரிசி மாவு
  16. ரவா தோசை மாவுக்காக:
  17. 1 கப் அரிசி மாவு
  18. 3/4 கப் ரவை
  19. 1/4 கப் ஆட்டா

வழிமுறைகள்

  1. ஒரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் விட்டு சூடுபடுத்திக்கொள்ளவும். தாளிப்புகளைச் சேர்த்து அதன்பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, இஞ்சித் துண்டகள் சேர்த்து அவற்றை வறுத்துக்கொள்ளவும்.
  2. தக்காளி, கொஞ்சம் உப்பு சேர்த்து அவற்றை வறுத்தபிறகு உருளைக்கிழங்கு, அரைத்த மசாலா, மஞ்சள் தூள் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்க்கவும். (இது ஆலூ பால்யா, தமிழில் வெல்ல குருமா என்று அழைக்கப்படும்)
  3. தோசைக்கு, 1 கப் அரிசி மாவு, 3/4 கப் ரவை, 1/4 இணைக்கப்பட்டதையும் உப்பையும் சேர்த்து நீர்மமாக மாவை தயாரிக்க தண்ணீரையும் சேர்க்கவும்.
  4. கடுகு, சீரகம், எள்ளு, பெருங்காயம், பொடியாக நறுக்கப்பட்ட கொத்துமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைக் கொண்டு தாளித்து மாவுக்கு சுவையேற்றவும்.
  5. ஒரு நான்-ஸ்டிக் தவாவை எடுத்து சூடுபடுத்திக்கொள்க. தவாயில் மாவை ஊற்றி வழக்கமான தோசையைப் போல் பரவச்செய்யவேண்டாம். எல்லா பக்கங்களிலும் எண்ணெய் சேர்த்து மொறுமொறுப்பாக வேகவைக்கவும். அடுத்த பக்கத்தையும் வேகவைக்கவும்.
  6. பால்யா மற்றும் சட்டினியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்