வீடு / சமையல் குறிப்பு / ஜாம் ஹனி கேக்

Photo of Jam honey cake by Krishnasamy Vidya Valli at BetterButter
311
2
0.0(0)
0

ஜாம் ஹனி கேக்

Apr-27-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
75 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

ஜாம் ஹனி கேக் செய்முறை பற்றி

ப்ரூட் ஜாம் மற்றும் தேன் கோட் செய்த கேக் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. மைதா/கோதுமை/மல்டி கிரேன் மாவு -11/2 கப்
  2. தயிர் -1/2 கப்
  3. வெண்ணெய்/எண்ணெய் -1/2 கப்
  4. சீனி -3/4 கப்
  5. பால் -1/2 கப்
  6. பேக்கிங் பவுடர் -3/4 தேக்கரண்டி
  7. பேக்கிங் சோடா -2 சிட்டிகை
  8. வெனிலா எஸன்ஸ் -1 தேக்கரண்டி
  9. அலங்கரிக்க
  10. ப்ரூட் ஜாம் 1/4 கப்
  11. தேங்காய் துருவல் /நட்ஸ் பொடி -1 மேஜைக்கரண்டி (தேங்காய் துருவல் என்றால் வெறும் கடாயில் ஈரப்பசை போகும்வரை வறுத்து வைத்துக்கொள்ளவும்)
  12. ஹனி சிரப் செய்வதற்கு தேவையானவை
  13. சீனி -1 மேஜைக்கரண்டி
  14. தேன் -1/4 கப்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட பொருட்களை (அலங்கரிக்க மற்றும் ஸிரப் தவிர) ஒவ்வொன்றாக சேர்த்து கட் அண்ட் போல்ட் முறையில் கலந்து கொள்ளவும்
  2. மைக்ரோவேவ் அவனை 180 டிகிரியில் பிரீ ஹீட் செய்யவும்
  3. பேக்கிங் டிரேயில் பேக்கிங் பேப்பர் விரித்து செய்துவைத்த கலவையை விட்டு 40 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்
  4. டூத்பிக் வைத்து குத்தி ஒட்டாமல் வருகிறதா என பார்க்கவும். தேவைப்பட்டால் 10 நிமிடங்கள் கூடுதலாக பேக் செய்து கொள்ளவும்
  5. பேக்கிங் டிரேயிலிருந்து எடுத்து நன்றாக ஆற வைத்து டூத்பிக்பினால் ஆங்காங்கே கேக் முழுவதும் குத்திக்கொள்ளவும்.(ஹோல் செய்து கொள்ளவும்)
  6. கடாயில் சீனி மற்றும் 1/8 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைய விடவும்.
  7. ஒரு கொதி வந்தவுடன் (கம்பி பதம் தேவையில்லை கையில் ஒட்டும் பதம் போதும்) அடுப்பை அணைத்து ஆறவிடவும்
  8. நன்றாக ஆறியதும் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும்
  9. இந்த ஸிரப்பை கேக் மேலே டூத்பிக் கினால் குத்திய பகுதி வழியே உள்ளே ஸிரப் இறங்குமளவிற்கு விடவும். மீதியை அப்படியே மேலே தடவிவிடவும்.
  10. இதற்கு மேலே ஜாமை கனமாக தடவவும்.
  11. அதற்கு மேலே தேங்காய் துருவல்/நட்ஸ்பொடி ஸ்பிரட் செய்யவும்.
  12. கட் செய்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்