வீடு / சமையல் குறிப்பு / கேரட் ஹல்வா

Photo of Carrot halwa by Raihanathus Sahdhiyya at BetterButter
377
3
0.0(0)
0

கேரட் ஹல்வா

Apr-27-2018
Raihanathus Sahdhiyya
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கேரட் ஹல்வா செய்முறை பற்றி

மிகவும் சத்தான மற்றும் சுவையான இனிப்பு வகை இது.. கேரட்டை விரும்பாதவர்கள் கூட விரும்பி ருசிக்கும் கேரட் ஹல்வா ரேசிபி இதோ..

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கேரட் 1/4 கிலோ
  2. பால் 1 கப்
  3. சர்க்கரை 3/4 கப்
  4. நெய் 4 மேசைக்கரண்டி
  5. முந்திரி 1/4 கப்
  6. கோவா (இனிப்பு இல்லாதது) 50 கிராம்

வழிமுறைகள்

  1. முதலில் குக்கரில் நெய் விட்டு துருவிய கேரட்டை சேர்த்து வதக்கவும். இவ்வாறு செய்தால் நல்ல சுவை கூடும்
  2. பின்னர் பால் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  3. பின்னர் பால் வற்றும் வரை கிளறவும்
  4. பா‌ல் வற்றிய பின் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறவும். சர்க்கரை சேர்த்த உடன் தண்ணீர் விடும். என்வே இன்னும் சிறிது நேரம் கிளறவும்.
  5. இப்போது இனிப்பு இல்லாத கோவா சேர்த்து கிளறவும். இது கூடுதல் சுவை கொடுப்பது மட்டுமின்றி ஹல்வா நன்றாக தண்ணீர் விடாமல் திக்காக வருவதற்கு உதவும்.
  6. இறுதியாக இரண்டு ஸ்பூன் நெய் விட்டு முந்திரி வறுத்து அதை ஹல்வாவில் சேர்த்து இறக்கவும். சுவையான கேரட் ஹல்வா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்