Photo of Dubai Malai by Raihanathus Sahdhiyya at BetterButter
532
4
0.0(1)
0

Dubai Malai

Apr-27-2018
Raihanathus Sahdhiyya
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

Dubai Malai செய்முறை பற்றி

இது துபாய் நாட்டு இனிப்பா என்றெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள்.... இதற்கு ஏன் இந்த பெயர் என்று எனக்கு தெரியாது... ஆனால் இது மிகவும் ருசியாக இருக்கும்... கிட்டத்தட்ட ரஸ் மலாய் போல தான்!!.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • ஈத்
  • இந்திய
  • சிம்மெரிங்
  • பாய்ளிங்
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பால் பவுடர் 1 கப்
  2. முட்டை வெள்ளை கரு 2/3
  3. பால் 1 லிட்டர்
  4. சர்க்கரை 1/2 கப்
  5. முந்திரி, பாதாம் 1 கையளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பால் பவுடர் எடுத்து அதில் முட்டை வெள்ளைக் கரு சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும். பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. அதே நேரம் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி வைக்கவும். ரஸ் மலாய் செய்வது போல, பால் ஆடையை பாத்திரத்தின் ஓரமாக ஒதுக்கி கொண்டு இருக்க வேண்டும்.
  3. பால் நன்கு மூன்றில் ஒரு பங்காய் வற்றிய பின் சர்க்கரையை சேர்த்து கிளறவும்.
  4. அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து, பாத்திரத்தை மூடி வைத்து வேக விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து விட வேண்டும்.
  5. அந்த உருண்டைகள் நன்றாக வெந்ததும், முந்திரி பாதாம் பருப்புகளை நெய்யில் வறுத்து அதில் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  6. இவ் இனிப்பை குளிர்சியாக பரிமாறினால் மிகவும் நன்றாக இருக்கும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Apr-28-2018
Pushpa Taroor   Apr-28-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்