வீடு / சமையல் குறிப்பு / அம்பாலாப்புழா பால் பாயாசம்

351
2
4.0(0)
0

அம்பாலாப்புழா பால் பாயாசம்

Apr-24-2016
Chitra Sundaram
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 4 கிளாஸ் கொழுப்பு நிறைந்த பால்
  2. 1 கப் சர்க்கரை
  3. கையளவு உடைத்த மட்ட அரிசி

வழிமுறைகள்

  1. 1/2 தேக்கரண்டி நெய்யில் மட்ட அரிசியை 30ல் இருந்து 40 நொடிகள் வறுக்கவும். அதன்பிறகு வெளியில் எடுத்துவிடவும் (நீண்ட நேரம் வறுக்காதீர்கள்) ஒரு பிரஷர் குக்கரில் அரிசியை (3 அல்லது 4 விசில்களுக்கு) 1/2 கப் தண்ணீரோடும் 1/4 கப் பாலோடும் வேகவைக்கவும். (இதற்காக நான் பச்சைப் பால் பயன்படுத்தினேன். கொதித்தது அல்ல).
  2. ஒரு பெரிய பாத்திரத்தில், மீதமுள்ள பால், சர்க்கரை, வேகவைத்த அரிசி ஆகியவற்றைச் சேர்க்கவும். சர்க்கரை பாலில் நன்றாகக் கரையும் வரை கலக்கவும்.
  3. ஒரு பெரிய பிரஷர் குக்கரில் (நான் 7 லிட்டர் குக்கர் பயன்படுத்தினேன்) தண்ணீர் சேர்த்து பாயாச பாத்திரத்திரத்தை குக்கரில் வைத்து பிரஷர் குக்கரை மூடிவிட்டு வெயிட்டை வைக்கவும். மிகவும் குறைவானத் தீயில், குக்கரை வைத்து பிரஷர் குக் செய்யவும்.
  4. 45 நிமிடங்கள் ஆகும் முதல் விசில் வருவதற்கு. அடுப்பை நிறுத்தவும். பிரஷர் தானாக வெளியேற்றட்டும். ஒட்டுமொத்த பிரஷரும் வெளியேறியதும் குக்கரைத் திறக்கவும்.
  5. பாயாசத்திற்கான பதத்தைச் சரிபார்க்கவும். அடர்த்தியாக இல்லையென்றால் அல்லது நிறம் பிங்காக மாறிவிட்டது என்றால் பாத்திரத்தை நேரடியாக அடுப்பில் வைக்கவும் (உங்கள் பாலின் தன்மையைப் பொறுத்தது). பாயாசத்தைக் கலக்கவும். மிக துரிதமாக சூடேறிவிடும், கவனம்.
  6. இது 10-15 நிமிடங்கள் ஆகும், அடர்த்தியான நுரையுடனான பாயாசத்தைப் பெறுவதற்கு.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்