வீடு / சமையல் குறிப்பு / பொரித்த அன்னாசி ஸ்வீட்

Photo of Pineapple Fried Sweet by Ayesha Ziana at BetterButter
188
4
0.0(0)
0

பொரித்த அன்னாசி ஸ்வீட்

Apr-29-2018
Ayesha Ziana
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பொரித்த அன்னாசி ஸ்வீட் செய்முறை பற்றி

அன்னாசிப்பழத்தை மாவில் முக்கிப் பொரித்த ஸ்வீட்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அன்னாசிப்பழம் 10 துண்டுகள்(நீளமாக நறுக்கியது)
  2. மைதா 100 கிராம்
  3. சோள மாவு 50 கிராம்
  4. சீனி 200 கிராம்
  5. தட்டிய ஏலக்காய் 1/2 ஸ்பூன்
  6. துருவிய தேங்காய் தேவைக்கு
  7. பாதாம் தேவைக்கு
  8. தண்ணீர் 3/4 கப்
  9. உப்பு தேவைக்கு
  10. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. மைதா, சோள மாவு, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.
  2. வாணலியில் சீனி மற்றும் 3/4 கப் தண்ணீர் சேர்த்து 1 கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும். தட்டிய ஏலக்காய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  3. ஒரு பேனில் தேங்காயைச் சிறிது நேரம் பச்சை வாசனை போகும் வரை வறுத்துக் கொள்ளவும். நிறம் மாறக் கூடாது.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அன்னாசி துண்டுகளை மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். ஒரு நிமிடம் கழித்து சீனி பாகில் போடவும்.
  5. 10 நிமிடங்கள் கழித்து, அன்னாசி சீனி பாகில் நன்றாக ஊறிய பிறகு, ஒவ்வொரு துண்டாக எடுத்து தேங்காயில் போட்டு பிரட்டி, மேலே நறுக்கிய பாதாம் வைத்து அலங்கரிக்கவும்.
  6. சூப்பரான அன்னாசி ஸ்வீட் தயார். இது மினி பார்ட்டிகளுக்கு ஏற்றது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்