பஹடி ராஜ்மா மதரா/சம்பா மதரா | Pahadi Rajma Madra/Chamba Ka Madra in Tamil

எழுதியவர் Rina Vora  |  24th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Pahadi Rajma Madra/Chamba Ka Madra by Rina Vora at BetterButter
பஹடி ராஜ்மா மதரா/சம்பா மதராRina Vora
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  50

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

229

0

பஹடி ராஜ்மா மதரா/சம்பா மதரா recipe

பஹடி ராஜ்மா மதரா/சம்பா மதரா தேவையான பொருட்கள் ( Ingredients to make Pahadi Rajma Madra/Chamba Ka Madra in Tamil )

 • ராஜ்மா 100 கி/1 டீ கப்
 • சுத்தமான தயிர் 200 மிலி
 • நாட்டு நெய் 2 தேக்கரண்டி
 • கிராம்பு 2- 3
 • இலவங்கப்பட்டை 1 ஸ்டிக்
 • பச்சை ஏலக்காய் 2
 • கருப்பு ஏலக்காய் 1
 • சீரகம் 1/4 டீக்கரண்டி
 • பெருங்காயம் சிறிதளவு
 • சோம்பு/ பெருஞ்சீரகம் 1/4 டீக்கரண்டி
 • வெந்தய பொடி 1/4 டீக்கரண்டி
 • மஞ்சள்தூள் சிறிதளவு
 • அரிசி மாவு 1 டீக்கரண்டி அல்லது ஊறவைத்து அரைத்த அரிசி 1 டீக்கரண்டி (விருப்பத்திற்கேற்ப)
 • சிவப்பு மிளகாய் பொடி 1/2 டீக்கரண்டி + 1 விரலளவு (விருப்பத்திற்கேற்ப)
 • கரம் மசாலா 1/4 டீக்கரண்டி (விருப்பத்திற்கேற்ப)
 • சுவைக்கேற்ப உப்பு

பஹடி ராஜ்மா மதரா/சம்பா மதரா செய்வது எப்படி | How to make Pahadi Rajma Madra/Chamba Ka Madra in Tamil

 1. ராஜ்மாவை 6-8 மணிநேரம் கழுவி ஊறவைக்கவும். அதில் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும், ஆனால் உடைந்துவிடக் கூடாது. அதை வடிக்கட்டி தனியே எடுத்து வைத்துக் கொண்டு, தண்ணீரையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். அரிசி மாவில் தயிர் நன்கு சேர்ந்து மென்மையாக ஆகும்வரை நன்கு கலக்கவும்.
 2. அழுத்தமான அடிப்பகுதியுடைய கடாயை எடுத்துக் கொள்ளவும், 2 தேக்கரண்டி நெய்யை சூடுசெய்து, சீரகத்தை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்ளவும். அவை நன்கு பொரிந்ததும் சீரகத்தையும் பெருங்காயத்தையும் சேர்த்து கொள்ளவும். இப்போது அடுப்பை அணைத்து விட்டு, மஞ்சள்தூள் மற்றும் தயிரை சேர்த்து கொள்ளவும்.
 3. நன்கு கலக்கிவிட்டு பிறகு பாத்திரத்தை தீயில் வைக்கவும். நன்கு கிண்டி, கொதிக்கவிடவும். இப்போது குறைந்த தீயிலிருந்து நடுத்தர தீயில் வைத்து கிண்டவும், அது கெட்டியானவுடன் அடிப்பகுதி மற்றும் ஓரங்களில் ஒட்டும், அதை சுரண்டிவிட்டு மீண்டும் சேர்க்கவும்.
 4. தயிரை பொன்னிறமாக ஆகும் வரை கொதிக்க விடவும், இதற்கு 30-40 ஆகும். (அது அடிப்பிக்காமல் இருப்பதை உறுதி செய்ய அவ்வபோது தண்ணீரை தெளிக்கலாம்.
 5. வெந்தயபொடி, சோம்புத்தூள் மற்றும் சிவப்பு மிளகாய் தூளை சேர்க்கவும். பிறகு வேகவைத்த ராஜ்மா மற்றும் சிறிது நீரையும் சேர்க்கவும். உப்பு பார்த்து தேவையான பதம் வரும்வரை குறைந்த தீயில் கிண்டவும். பிறகு கரம் மசாலா (தேவைப்பட்டால்) மற்றும் சிவப்பு மிளகாய் பொடியை (தேவைப்பட்டால்) சேர்க்கவும்.
 6. பாத்திரத்தை மூடி, 5 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் வேகவிடவும். அது நன்கு வெந்தவுடன் நெய் தனியாக பிரிந்து வருவதை பார்க்கலாம்.
 7. உங்கல் விருப்பப்படி சாதம்/ப்ரெட்டுடன் சேர்த்து பரிமாறவும்.

Reviews for Pahadi Rajma Madra/Chamba Ka Madra in tamil (0)