மாதுளை சீஸ் கேக் | Pomegranate Cheesecake in Tamil

எழுதியவர் Ayesha Ziana  |  2nd May 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Pomegranate Cheesecake by Ayesha Ziana at BetterButter
மாதுளை சீஸ் கேக்Ayesha Ziana
 • ஆயத்த நேரம்

  5

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

0

0

மாதுளை சீஸ் கேக் recipe

மாதுளை சீஸ் கேக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Pomegranate Cheesecake in Tamil )

 • க்ரஸ்ட் செய்ய: மேரி பிஸ்கட் 10
 • உப்பில்லாத வெண்ணெய் 50 கிராம்
 • பில்லிங் செய்ய: பனீர் 100 கிராம்
 • தயிர் 50 கிராம்
 • பிரஷ் க்ரீம் 100 மில்லி
 • மாதுளை ஜூஸ் 1/2 கப்
 • அகர் அகர் துண்டுகள் 2.5 கிராம்
 • வெனிலா எஸ்ஸென்ஸ் 1/2 ஸ்பூன்
 • பொடித்த சீனி 13 ஸ்பூன்
 • மாதுளை முத்துக்கள் சிறிது
 • டாப் லேயர் செய்ய: மாதுளை ஜூஸ் 1/2 கப்
 • பொடித்த சீனி 4 ஸ்பூன்
 • அகர் அகர் துண்டுகள் 1 ஸ்பூன்
 • மாதுளை முத்துக்கள் சிறிது

மாதுளை சீஸ் கேக் செய்வது எப்படி | How to make Pomegranate Cheesecake in Tamil

 1. க்ரஸ்ட் செய்ய: பிஸ்கட்டை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் உருக்கி, பிஸ்கட் பொடி சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும். பின், வெண்ணெய் தடவிய கேக் பேனில் பிஸ்கட் கலவையை பரவலாக கொட்டி, ஒரு கப்பின் பின்புறத்தால் அழுத்தி சமன்படுத்தவும். பின்னர் கேக் பேனை பிரிட்ஜில் குறைந்தது 1/2 மணி நேரம் வைக்கவும். க்ரஸ்ட் தயார்.
 2. பில்லிங் செய்ய: மிக்ஸியில் முதலில் பனீர், பின் அதனுடன் தயிர், பின் இறுதியாக லேசாக பீட் செய்த பிரஷ் க்ரீம் சேர்த்து அரைத்து ஒரு பவுலில் ஊற்றி, பொடித்த சீனி மற்றும் வெனிலா சேர்த்து கலந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மாதுளை ஜூசில் அகர் அகர் சேர்த்து கரையும் வரை கொதிக்க வைத்து, அதையும் பவுலில் ஊற்றவும். பின் மாதுளை முத்துக்களையும் சேர்த்து கலந்து, உடனே பிரிட்ஜில் இருக்கும் கேக் பேனில் அடுத்த லேயராக ஊற்றவும். இதையும் பிரிட்ஜில் குறைந்தது 1/2 மணி நேரம் வைக்கவும். பில்லிங் லேயர் தயார்.
 3. டாப் லேயர் செய்ய: மாதுளை ஜூஸுடன் பொடித்த சீனி சேர்த்து சற்று பாதியாகும் வரை கொதிக்க வைக்கவும். பின்னர், பாதி ஜூஸை ஒரு பவுலில் ஊற்றி நன்றாக ஆற விடவும். மற்ற பாதி ஜூசில் அகர் அகர் சேர்த்து கரையும் வரை கொதிக்க விட்டு, மாதுளை முத்துக்களை சேர்த்து அடுப்பை அணைத்து, பவுலில் ஊற்றி கலந்து விடவும். பின், உடனே பிரிட்ஜில் இருக்கும் கேக் பேனில் செட்டான பில்லிங் லேயர் மேல் பவுலில் உள்ளதை கவனமாக ஊற்றவும். மீண்டும் குறைந்தது 3 மணி நேரம் பிரிட்ஜில் செட் செய்யவும்.
 4. இறுதியாக, செட்டான கேக்கை ஒரு தட்டில் கவிழ்த்தி, மீண்டும் மற்றொரு தட்டில் கவிழ்த்தி, துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
 5. மிகவும் சுவையான மாதுளை சீஸ் கேக் தயார். இதை பார்ட்டிகளில் பரிமாறினால் நிச்சயம் விருந்தினர் பாராட்டுவார்கள்.

எனது டிப்:

டாப் லேயர் சற்று பிங்காக வேண்டுமானால் சிறிது ரோஸ் புட் கலரும் சேர்க்கலாம். டாப் லேயராக மாதுளை சாஸும் ஊற்றலாம்.

Reviews for Pomegranate Cheesecake in tamil (0)