வீடு / சமையல் குறிப்பு / ஆம்லேட் கடல்பாசி

Photo of Omlette agar agar pudding by Rabia Hamnah at BetterButter
443
3
0.0(0)
0

ஆம்லேட் கடல்பாசி

May-03-2018
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஆம்லேட் கடல்பாசி செய்முறை பற்றி

வெயில் காலத்திற்கு ஏற்ற புட்டிங்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பால் -1/2 லிட்டர்
  2. கடல்பாசி(China grass/agar agar)-12gm
  3. வெணிலா எஸன்ஸ்-1/2ஸ்பூன்
  4. மஞ்சர் ஃபுட் கலர்- 2பின்ச்
  5. சீனி-தேவைக்கு
  6. மில்க்மெய்ட்-2டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலை இரண்டு பாகமாக பிரிக்கவும்.
  2. கடல்பாசியை இரண்டு பாகமாக பிரித்து தண்ணீருடன் சேர்த்து 15 நிமிடம் ஊற விடவும்.
  3. பின்பு ஒரு பங்கு கடல்பாசியை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அடுப்பில் ஏற்றி கரைய விடவும்.
  4. நன்றாக கரையும் வரை கலக்கிக் கொண்டே இருக்கவும்.
  5. கரைந்து வந்ததும் ஒரு பங்கு பால், ஒரு டேபிள் ஸ்பூன் மில்க்மெய்ட், தேவைக்கு சீனி சேர்த்து கிளறவும்.
  6. பின்பு கலரை சேர்த்து ஒரு சொட்டு வெணிலா எஸன்ஸ் சேர்த்து கிளறி முட்டை வைக்கும் பாத்திரத்தில் ஊற்றி ஆறியதும் ப்ரிட்ஜில் வைக்கவும்.
  7. பின்பு மற்றொரு பங்கு கடல்பாசியை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அடுப்பில் ஏற்றி கரைய விடவும்.
  8. கரைந்து வந்ததும் மற்றொரு பங்கு பால், ஒரு டேபிள் ஸ்பூன் மில்க்மெய்ட், தேவைக்கு சீனி சேர்த்து கிளறவும்.
  9. பின்பு எஸன்ஸ் சேர்த்து கிளறி கிண்ணங்களில் ஊற்றி ஆறியதும் ப்ரிட்ஜில் வைக்கவும்.
  10. இரண்டு மணி நேரம் கழித்து செட் ஆகியிருக்கும்.
  11. கிண்ணங்களில் இரூக்கும் கடல்பாசியின் மேல் மஞ்சள் நிற கடல் பாசியை எடுத்து மேலே வைத்தால் ஆம்லட் போன்று தோற்றறமலிக்கும்.
  12. குழந்தைகள் விரும்புவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்