வீடு / சமையல் குறிப்பு / மாச்சா டர்க்காரி (ஒடியா பாணி ரோஹூ மீன் குழம்பு)

Photo of Macha Tarkari (Odia Style Rohu Fish Curry) by Alka Jena at BetterButter
11893
13
4.5(0)
0

மாச்சா டர்க்காரி (ஒடியா பாணி ரோஹூ மீன் குழம்பு)

Apr-25-2016
Alka Jena
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஒரிசா
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 500 கிராம் ரோஹூ மீன்
  2. 2 நடுத்தர அளவு உருளைக்கிழங்கு
  3. 1நடுத்தர அளவு வெங்காரம்
  4. 1 தேக்கரண்டி - பூண்டு விழுது
  5. 2 காய்ந்த மிளகாய்
  6. 1 தேக்கரண்டி மல்லித் தூள்
  7. 1தெக்கரண்டி மஞ்சள்தூள்
  8. 1 பிரிஞ்சி இலை 1 இன்ச் இலவங்கப்பட்டை
  9. 2 பச்சை ஏலக்காய்
  10. 1 சிறிய தக்காளி
  11. சுவைக்கேற்ற உப்பு
  12. 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
  13. 1/4 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  14. 1/2 தேக்கரண்டி வறுத்த சீரகத்தூள்
  15. 1/4 தேக்கரண்டி பஞ்ச பூதன் (ஐந்து மசாலா கலவை)

வழிமுறைகள்

  1. மீனைக் கழுவி மஞ்சள்தூள் உப்பை மீன் மீது தடவவும். 15 நிமிடங்களுக்கு மேரினேட் செய்து எடுத்து வைக்கவும்.
  2. வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  3. உருளைக்கிழங்கை நடுத்தர அளவில் நறுக்கி அதில் மஞ்சள்தூள் உப்பு தடவவும்.
  4. கொஞ்சம் கடுகு எண்ணெயை ஊற்றி புகையும்வரை சூடுபடுத்தவும். மீன்களை மெல்ல கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொரித்தெடுக்கவும். மீன்களை எடுத்து சமையல் துண்டில் வைக்கவும்.
  5. அதே எண்ணெயில் உருளைக்கிழங்குகளை பொரித்து எடுத்துவைக்கவும்.
  6. பிரிஞ்சி இலை, இலவங்கப்பட்டையை எண்ணெயில் சேர்த்து வாசனை வரும்போது ஒரு சிட்டிகை பஞ்ச பூதத்தை போடவும்.
  7. அடுத்து வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும்வரை வறுத்து, எண்ணெயில் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து மசாலா வேகும்வரை பச்சைவாடை போகும்வரை கலக்கி வறுக்கவும்.
  8. நறுக்கிய தக்காளி, உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். மசாலாவில் இருந்து எண்ணெய் கசியும்வரை மேலும் சில நிமிடங்கள் வேகவைக்கவும்.
  9. ஒயு கப் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து உருளைக்கிழங்கு மிருதுவாகும் வரை சிம்மில் வேகவைக்கவும். அதில் மீனைப்போட்டு 2ல் இருந்து 3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  10. அடுப்பிலிருந்து இறக்கி அலங்கரிக்க கரம் மசாலா நறுக்கிய கொத்துமல்லி சேர்க்கவும்.
  11. வழக்கமான சாதத்தோட சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்