சகுலி பித்தா, ஆலூ பாஜா & குகுனி - பாரம்பரிய ஒடியக் காலை உணவு | Chakuli Pitha, Aloo Bhaja & Ghuguni - A Traditional Odia Breakfast in Tamil

எழுதியவர் Alka Jena  |  25th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Chakuli Pitha, Aloo Bhaja & Ghuguni - A Traditional Odia Breakfast by Alka Jena at BetterButter
சகுலி பித்தா, ஆலூ பாஜா & குகுனி - பாரம்பரிய ஒடியக் காலை உணவுAlka Jena
 • ஆயத்த நேரம்

  5

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  50

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

76

0

சகுலி பித்தா, ஆலூ பாஜா & குகுனி - பாரம்பரிய ஒடியக் காலை உணவு recipe

சகுலி பித்தா, ஆலூ பாஜா & குகுனி - பாரம்பரிய ஒடியக் காலை உணவு தேவையான பொருட்கள் ( Ingredients to make Chakuli Pitha, Aloo Bhaja & Ghuguni - A Traditional Odia Breakfast in Tamil )

 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 1 தேக்கரண்டி கரம் மசாலா
 • 1/2 தேக்கரண்டி சீரகத் தூள்
 • 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
 • 1 தேக்கரண்டி நறுக்கிய கொத்துமல்லி இலைகள்
 • 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
 • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1 நடுத்தர அளவு உருளைக்கிழங்கு
 • 1/4 தேக்கரண்டி பஞ்ச பூதன்
 • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1 தேக்கரண்டி கடுகு எண்ணெய்
 • சுவைக்கேற்ற உப்பு
 • 2 எண்ணிக்கை உலர் சிவப்பு மிளகாய் நடுத்தர அளவு
 • 2 எண்ணிக்கை உருளைக்கிழங்கு மெலிதான பட்டைகளாக நறுக்குக
 • ஒடியா பாணியில் வதக்கிய உருளைக்கிழங்கு (ஆலூ பாஜா):
 • தேவையான அளவு தண்ணீர்
 • 2 கப் அரிசி
 • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
 • 2 தேக்கரண்டி எண்ணெய்
 • 1 தேக்கரண்டி மல்லித்தூள்
 • 1 நடுத்தர அளவு பொடியாக நறுக்கிய தக்காளி
 • 1 நடுத்தர அளவு பொடியாக நறுக்கிய வெங்காயம்
 • சுவைக்கேற்ற உப்பு
 • 1 குழு வெள்ளை பட்டாணி
 • குகுனிக்கு (உலர் வெள்ளைப் பட்டாணிக் குழம்பு):
 • 1ல் இருந்து 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய்
 • சுவைக்கேற்ற உப்பு
 • 1 கப் வெள்ளை பருப்பு
 • சக்குளி பித்தாவுக்கு:

சகுலி பித்தா, ஆலூ பாஜா & குகுனி - பாரம்பரிய ஒடியக் காலை உணவு செய்வது எப்படி | How to make Chakuli Pitha, Aloo Bhaja & Ghuguni - A Traditional Odia Breakfast in Tamil

 1. சக்குளி பித்தா எப்படித் தயாரிப்பது:
 2. வெள்ளை பருப்பையும் அரிசியையும் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும். அதன்பின்னர் கூடுதலானத் தண்ணீரை வடிக்கட்டி சாந்தாக அரைத்துக்கொள்க. அரைப்பதற்கு, பருப்பையும் அரிசியையும் மூழ்கும் அளவிற்குத் தண்ணீர் சேர்க்கவும்.
 3. கலவையை 4ல் இருந்து 5 மணி நேரம் நொதிக்கவிடவும். உப்பு தண்ணீரையும் மாவைச் சற்றே தளர்வாகத் தயாரிக்கச் சேர்க்கவும். மாவு தண்ணீர் போல் இல்லாமல் பார்த்துக்கொள்க.
 4. இதுதான் வழக்கமாக சக்குளி பித்தா தயாரிக்கும் முறை, ஆனால் புதிதாக தயாரிக்க விரும்புவதால் மாவை 30 நிமிடங்கள் அரைத்தபின்ன வைத்து பயன்படுத்துவேன்.
 5. மாவை நன்றாகக் கலந்து அடுப்பின் மீது கடாயில் வைக்கவும். நான் ஸ்டிக் தவாவை மிதமானச் சூட்டில் சூடுபடுத்துக.
 6. கடாய் சூடானதும், 1/2 தேக்கரண்டி எண்ணெய் சேயர்த்து கடாயின் மீது பரவச் செய்யவும்.
 7. ஒரு சிறிய கிண்ணம் மாவை எடுத்து கடாயில் வட்டவடிவில் பரவச் செய்யவும். சிறிது நேரத்திற்குப் பிறகு பித்தாவின் கீழ் பகுதியைச் சரிபார்க்கவும். கீழ் பகுதி பொன்னிறமாக மாறியிருந்தால் அடுத்த பக்கத்தைத் திருப்பிப்போடவும்.
 8. பேன் கேக் (பித்தா) இரு பக்கமும் நன்றாக வெந்ததும் அடுப்பை நிறுத்திவிடவும். அனைத்துப் பித்தாக்களுக்கும் இதே முறையைப் பின்பற்றி செய்யவும். (பேன்கேக்குகள்)
 9. ஆலூ பஜா, குகுனி மற்றும் இருப்பக்கங்களிலும் வெல்லம் சேர்த்துச் சூடாகப் பரிமாறவும்.
 10. குகுனி எப்படி தயாரிப்பது:
 11. வெள்ளைப் பட்டாணியை இரவு முழுவதும் அல்லது குறைந்தபட்சம் 3-4 மணி நேரங்கள் ஊறவைக்கவும்.
 12. உருளைக்கிழங்கின் தோலை உரித்து தண்டுகளாக நறுக்கிக்கொள்க.
 13. மஞ்சள் பட்டாணி உருளைக்கிழங்கை 2-3 விசில்களுக்கு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி உப்புடன் பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆறியதும் பிரஷர் குக்கரின் மூடியைத் திறந்து ஆவியை வெளியேற்றவும்.
 14. கடாயை எண்ணெயோடுச் சூடுபடுத்துக. சூடான எண்ணெயில் சீரகத்தைச் சேர்த்து அது வெடிக்க ஆரம்பித்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
 15. இஞ்சிப்பூண்டு சாந்து சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி குழகுப்பாகி எண்ணெய் வெளியேறும்வரை வதக்கவும்.
 16. மஞ்சள் தூள், சீரகத் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, சிவப்பு மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும.
 17. இப்போது வேகவைத்த வெள்ளைப் பட்டாணியையும் உருளைக்கிழங்கையும் அதனோடு சேர்க்கவும். ஒருசில உருளைக்கிழங்குகளை மசிப்பது குழம்பை அடர்த்தியாக்கி உருளைக்கிழங்கு வேகவைத்த ஒவ்வொரு பூரணத்திலும் இருப்பதால் அதிக சுவையைக் கொடுக்கும்.
 18. சுவைக்கேற்றபடி உப்பு சேர்க்கவும். இப்போது கொஞ்சம் தண்ணீர் கலந்து சிம்மில் 2-3 நிமிடங்கள் மூடியிட்டு வேகவைக்கவும். அடுப்பை நிறுத்தி கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.
 19. ஆலூ பாஜா எப்படி தயாரிப்பது:
 20. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி பஞ்ச பூதனத்தையும் சிவப்பு மிளகாயையும் சேர்க்கவும். விதைகள் வெடிக்க ஆரம்பித்ததும் மிளகாய் புகைய ஆரம்பித்ததும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
 21. உருளைக்கிழங்குத் துண்டுகளைச் சேர்தது உயர் தீயில் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வறுத்து, மூடி சிறு தீயில் மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.
 22. உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கலக்கவும்.
 23. புதிதாகச் சூடாக மெலிதான சக்குளி பித்தாக்களோடுப் பரிமாறவும்.

Reviews for Chakuli Pitha, Aloo Bhaja & Ghuguni - A Traditional Odia Breakfast in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.