பிஞ்சு பலாக்காய் குழம்பு | Panasa Katha Kasa - Kathal Ki Sabzi - Tender Jackfruit Curry in Tamil

எழுதியவர் Alka Jena  |  25th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Panasa Katha Kasa - Kathal Ki Sabzi - Tender Jackfruit Curry by Alka Jena at BetterButter
பிஞ்சு பலாக்காய் குழம்புAlka Jena
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  25

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

180

0

பிஞ்சு பலாக்காய் குழம்பு recipe

பிஞ்சு பலாக்காய் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Panasa Katha Kasa - Kathal Ki Sabzi - Tender Jackfruit Curry in Tamil )

 • உருளைக்கிழங்கு - 1 வேகவைத்து தோலுரித்து நறுக்கியது
 • வெங்காயம் - 2
 • கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
 • காஷ்மீர் சிவப்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
 • உப்பு - சுவைக்கேற்ற அளவு
 • பச்சை ஏலக்காய் - 2
 • காய்ந்த மிளகாய் - 2
 • கடுகு எண்ணெய் - 2 தேக்கரண்டி
 • நறுக்கிய கொத்துமல்லி - 1 தேக்கரண்டி
 • பஞ்ச பூதனம் - 1/2 தேக்கரண்டி
 • இலவங்கப்பட்டை - 1 இன்ச்
 • பிரிஞ்சி இலை - 1
 • மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
 • மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
 • இஞ்சிப்பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
 • தக்காளி - 2
 • பிஞ்சு பலாக்காய் - பாதி அல்லது 400 கிராம்

பிஞ்சு பலாக்காய் குழம்பு செய்வது எப்படி | How to make Panasa Katha Kasa - Kathal Ki Sabzi - Tender Jackfruit Curry in Tamil

 1. பலாக்காயின் தோலை முதலில் நீக்கிவிடுக. இதற்காக உங்கள் கைகளில் கத்தியில் நீங்கள் எண்ணெய் தடவவேண்டும். பலாக்காயில் பிசின் போன்றது வெளிவரும், உங்கள் கைகளை அவ்வளவு எளிதில் விட்டு விலகாது.
 2. நான் சமையல் கையுறையைக் கூடுதல் பாதுகாப்பிற்காக அணிந்து கையுறையில் எண்ணெய் தடவிக்கொள்வேன். ஒரு சிய பாத்திரத்தில் எண்ணெய் எடுத்து பக்கத்தில் வைத்துக்கொள்ளவும். உங்கள் விரல்களை எண்ணெயில் நனைத்து அவ்வப்போது பலாக்காயை நறுக்கவும்.
 3. பலாக்காயை 1 இன்ச் சதுரமாக வெட்டிக்கொள்ளவும். கடினமான நடுப்பகுதியை விட்டுவிடவும், அது வேகாது.
 4. முதலில் பலாக்காயை உருளைக்கிழங்கு உப்பு மஞ்சள் தூளோடு மிருவாக வேகவைத்துக்கொள்க. கூடுதல் தண்ணீரை வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
 5. ஒரு பிரஷர் குக்கரில் கடுகை புகையும் நிலைவரை சூடுபடுத்துக. பஞ்ச பூதனத்தையும், பிரிஞ்சி இலை, இலவங்கப்பட்டை, பச்சை ஏலக்காய், சிவப்பு மிளகாய் முறையே சேர்த்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாய் நிறம் மாறியதும் உடனே நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.
 6. சிறு தீயில் வெங்காயம் வெளுக்கும்வரை வதக்கவும். இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும். நறுக்கியத் தக்காளி சேர்த்து 1ல் இருந்து 2 நிமிடங்கள் வேகவைக்கவும்.
 7. இப்போது அனைத்து உலர் மசாலாக்களையும் சேர்க்கவும்: மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய்த் தூள், மல்லித்தூள், உப்பு. நன்றாகக் கலக்கி எண்ணெய் கடாயின் பக்கங்களில் வெளிவரும்வரை வேகவைக்கவும்.
 8. அதன்பின்னர் பலாக்காத் துண்டுகளையும் வேகவைத்த உருளைக்கிழங்குகளையும் சேர்க்கவும். சிறு தீயில் பலாக்காயை மசாலாக்களை உறிஞ்சும்வரை வேகவைக்கவும்.
 9. கரம் மசாலா 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடியிட்டு மூடி பிரஷர் குக்கரில் ஒரு விசிலுக்கு வேகவைத்து அடுப்பை நிறுத்துக.
 10. தானாக பிரஷர் குக்கரின் ஆவி அடங்கட்டும். திறந்து கொத்துமல்லி சேர்த்து ரொட்டிகள், நான் அலலது பராத்தாவோடு பரிமாறுக.

Reviews for Panasa Katha Kasa - Kathal Ki Sabzi - Tender Jackfruit Curry in tamil (0)