வீடு / சமையல் குறிப்பு / பூட்டா டாலி ஆலூ காக்கரு டர்காரி - உருளைக்கிழங்கு பூசணிக்காயுடன் கடலைப் பருப்பு குழம்பு

Photo of Buta Dali Aloo Kakharu Tarkari – Chana Dal With Potato And Pumpkin Curry by Alka Jena at BetterButter
763
16
0.0(0)
0

பூட்டா டாலி ஆலூ காக்கரு டர்காரி - உருளைக்கிழங்கு பூசணிக்காயுடன் கடலைப் பருப்பு குழம்பு

Apr-25-2016
Alka Jena
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • ஒரிசா
 • பிரெஷர் குக்
 • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. 1 கப் கடலை பருப்பு
 2. 1 பெரிய உருளைக்கிழங்கு நறுக்கியது
 3. 1 தக்காளி நறுக்கியது
 4. 2ல் இருந்து 3 சிவப்பு மிளகாய்கள்
 5. 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 6. 2 தேக்கரண்டி தேங்காய்த் துருவல்
 7. நறுக்கிய கொத்துமல்லியும் தேங்காயும் அலங்கரிப்பதற்காக
 8. சுவைக்கேற்ற உப்பு
 9. 1 தேக்கரண்டி சர்க்கரை
 10. 1 தேக்கரண்டி நெய்
 11. 1 கப் பூசணிக்காய் நறுக்கியது
 12. 1 தேக்கரண்டி வறுத்த சீரகத் தூள்
 13. உலர் சிவப்பு மிளகாய்த் தள் (3 தேக்கரண்டி சீரகம் 8-10 உலர் சிவப்பு மிளகாய்கள்)
 14. 1 தேக்கரண்டி சீரகம்
 15. 1 இன்ச் இஞ்சித் துருவல்

வழிமுறைகள்

 1. சீரக மிளகாய்ப் பொடிக்காக வாசனை வரும்வரை சீரகத்தையும் சிவப்பு மிளகாயையும் எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும். அதிகம் வறுத்து விதைகளைக் கருகவிடக்கூடாது. அரைத்து காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமித்து வைக்கவும்.
 2. உருளைக்கிழங்குகளை பூசணிக்காயோடுக் கழுவி துண்டுகளாக நறுக்கி எடுத்து வைக்கவும்.
 3. கடலை பருப்பை 30 நிமிடங்கள் ஊறவைக்கவும் கடலை பருப்பைக் கழுவி உருளைக்கிழங்கு, பூசணிக்காய், உப்போடு கொதிக்கவைத்து, மஞ்சள் தூள் ஆகியவற்றோடு ஒரு பிரஷர் குக்கரில் ஒரு விசிலுக்கு வேகவைக்கவும். பருப்பை அதிகம் வேகவைக்காதீர்.
 4. நெய்யை ஒரு கடாயில் சூடுபடுத்துக. சீரகம், உலர் சிவப்பு மிளகாய், பிரிஞ்சி இலை சேர்க்கவும். அவை வெடிக்க ஆரம்பித்ததும், இஞ்சித் துருவல் சேர்த்து ஒரு நிமிடம் வேகவைக்கவும். நறுக்கியத் தக்காளி சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.
 5. வேகவைத்தப் பருப்பை மேலுள்ள மசாலா, தேங்காய்த் துருவலில் சேர்த்து சிம்மில் சில நிமிடங்கள் வைக்கவும். சீரகம் மிளகாய்த் தூள் நறுக்கியக் கொத்துமல்லி இலைகள், தேங்காய்த் துருவலோடு அலங்கரிக்கவும்.
 6. பூரி அல்லது அரிசியுடன் பரிமாறவும். உணவின் பதம் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. அதனால் தண்ணீரை அதற்கேற்றவாறு சேர்த்து உண்டு மகிழவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்