வீடு / சமையல் குறிப்பு / பேரீத்தம்பழம் கஸ்ட்டர்டு புட்டிங்

Photo of Dates custard pudding by Shaima Fathima at BetterButter
374
2
0.0(0)
0

பேரீத்தம்பழம் கஸ்ட்டர்டு புட்டிங்

May-04-2018
Shaima Fathima
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பேரீத்தம்பழம் கஸ்ட்டர்டு புட்டிங் செய்முறை பற்றி

எளிதில் செய்யக்கூடிய ஆரோக்கியமான இனிப்பு வகை.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பேரீத்தம்பழம் - 3/4 கப்
  2. பால் - 2 & 1/2 கப்
  3. சர்க்கரை - 3/4 கப்
  4. கஸ்ட்டர்டு பவுடர் - 6 தேக்கரண்டி
  5. அண்டி ,பாதாம்,பிஸ்தா பொடி - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் பேரீத்தம்பழத்தை விதை நீக்கி அரைகப் பாலில் 15 நிமிடம் ஊறவைத்து அதை மிக்ஸியில் அந்தப்பாலோடு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் பாலை ஊற்றி அதனுடன் சர்க்கரை கஸ்ட்டர்டு பவுடர் சேர்த்து கட்டி பிடிக்காமல் கலந்து வைக்கவும்.
  3. அடுத்து அரைத்து வைத்திருக்கும் பேரீத்தம்பழக்கலவையை பால் சர்க்கரை கஸ்ட்டர்டு கலந்து வைத்திருக்கும் பாத்திரத்தில் அதனுடன் சேர்க்கவும்.
  4. அடுத்து கலந்து வைத்திருக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சின்ன தீயில் வைத்து அடிபிடிக்காமல் புட்டிங் பதத்தில் வரும் வரை கிளறி இறக்கவும்.
  5. ஆறியபின் ப்ரிட்ஜில் வைத்தை பரிமாறும்போது பொடி பண்ணி வைத்திருக்கும் அண்டி,பிஸ்தா, பாதாம் பொடியை அதன் மேல் தூவி பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்