வீடு / சமையல் குறிப்பு / ஸ்ட்ராபெர்ரி சீஸ் கேக் - நோ பேக்

Photo of No Bake - Strawberry Cheesecake by Menaga Sathia at BetterButter
373
2
0.0(0)
0

ஸ்ட்ராபெர்ரி சீஸ் கேக் - நோ பேக்

May-04-2018
Menaga Sathia
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்ட்ராபெர்ரி சீஸ் கேக் - நோ பேக் செய்முறை பற்றி

எல்லா வகையான பெர்ரி பழங்களில் இந்த சீஸ்கேக் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • அமெரிக்கன்
  • சில்லிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மேரி பிஸ்கட் -4
  2. பொடித்த சர்க்கரை -1/4 கப்
  3. வெனிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்
  4. க்ரீம் சீஸ் - 1 கப்
  5. உருகிய வெண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
  6. சாஸ் செய்ய
  7. ஸ்ட்ராபெர்ரி -1/2 கப்
  8. சர்க்கரை -1/4 கப்
  9. எலுமிச்சை சாறு -1 டேபிள்ஸ்பூன்
  10. துருவிய எலுமிச்சை தோல் -1/4 டீஸ்பூன்
  11. வெனிலா எசன்ஸ் -1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பிஸ்கட்டினை ஒரு கவரில் போட்டு நன்கு பவுடராக நுணுக்கவும்.பின் அதனுடன் உருகிய வெண்ணெய் சேர்க்கவும்
  2. 2 கண்ணாடி கிளாஸில் பிஸ்கட்டினை சிறிது போட்டு நன்றாக அழுத்திவிடவும்
  3. க்ரீம் சீஸினை 10 நிமிடத்திற்கு முன்பே ப்ரிட்ஜிலிருந்து எடுத்து வைக்கவும்.
  4. அதனை ஒரு கிண்ணத்தில் போட்டு சர்க்கரை,வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.
  5. இதனை பிஸ்கட்டின் மேல் வைத்து க்ளியர் ராப் கவரினால் மூடி பிரிட்ஜில் முதல்நாள் இரவு அல்லது 6 மணிநேரம் செட் ஆகும் வரை வைக்கவும்
  6. சாஸ்க்கு,மிக்ஸியில் ஸ்ட்ராபெர்ரி,சர்க்கரை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
  7. இதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிடவும்.மினுமினுப்பு பதம் வந்ததும் இறக்கி எலுமிச்சைசாறு, எலுமிச்சைதோல், வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கி ஆறவைக்கவும்.
  8. இதனை செட்டான சீஸ்கேக் மேல் ஊற்றி மீண்டும் ப்ரிட்ஜில் பரிமாறும் வரை வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்