Photo of Sudanese Madeeda Hilba by Ayesha Ziana at BetterButter
586
5
0.0(1)
0

Sudanese Madeeda Hilba

May-04-2018
Ayesha Ziana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

Sudanese Madeeda Hilba செய்முறை பற்றி

சூடான் நாட்டில் பிரபலமான ஹில்பா(வெந்தயம்) வைத்து செய்யப்படும் டெசர்ட். இது அங்கு ரமலான் உட்பட விசேஷ நாட்களுக்கு எல்லாம் டெசர்ட் ஆக செய்வார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஈத்
  • சிம்மெரிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வெந்தயம் 2 ஸ்பூன் நிறைய
  2. உப்பு 1 ஸ்பூன்
  3. பால் 2 கப்
  4. கோதுமை மாவு 2 கப்
  5. சீனி 1 முதல் 1.5 கப்
  6. தண்ணீர் 5 1/3 கப்
  7. பேக்கிங் சோடா 1 ஸ்பூன்
  8. எண்ணெய் அல்லது வெண்ணெய் 1/2 கப்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் 3 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வெந்தயம் நன்றாக வேகும் வரை 15 முதல் 20 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  2. பின்னர், பால் சேர்த்து லேசாக சூடானதும், சீனி சேர்த்துக் கலக்கவும்.
  3. ஒரு பவுலில் கோதுமை மாவு மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கட்டியில்லாமல் கிளறவும். கடாயில் சீனி கரைந்ததும், இந்த மாவுக்கலவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கை விடாமல் கிளறவும்.
  4. ஒரு பவுலில் பேக்கிங் சோடாவை 1/3 கப் தண்ணீரில் கரைத்து, பின் வடிகட்டி, கடாயில் சேர்க்கவும். இது நல்ல கலர் கொடுக்கும்.
  5. பின் ஓரிரு நிமிடங்கள் கழித்து கலவை நன்கு கெட்டியாகி ஒட்டாமல் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  6. பின் பவுலில் ஊற்றி இளஞ்சூடாகவோ சில்லென்றோ பரிமாறவும்.
  7. சூப்பர் சுவையில் ஆரோக்கியமான சூடான் டெசர்ட் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Raihanathus Sahdhiyya
May-05-2018
Raihanathus Sahdhiyya   May-05-2018

nice sister.. thanks for sharing the recipe..this one is more or less similar to our traditional dish Uluva kanji or venthaya kanji which we make often. but we use rice instead of wheat!! i love that very much. looking forward to try this

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்