அசோமியா எள் பித்தா | Asomiya Til Pitha in Tamil

எழுதியவர் Banashree Baruah  |  26th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Asomiya Til Pitha by Banashree Baruah at BetterButter
அசோமியா எள் பித்தாBanashree Baruah
 • ஆயத்த நேரம்

  7

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  15

  மக்கள்

96

0

அசோமியா எள் பித்தா recipe

அசோமியா எள் பித்தா தேவையான பொருட்கள் ( Ingredients to make Asomiya Til Pitha in Tamil )

 • தேவையான அளவு தண்ணீர்
 • கருப்பு எள் 150 கிராம்
 • வெல்லம் 200 கிராம்
 • பச்சை அரிசி 3 கப்

அசோமியா எள் பித்தா செய்வது எப்படி | How to make Asomiya Til Pitha in Tamil

 1. பெரிய கிண்ணத்தில் 6 கப் தண்ணீரில் விட்டு அரிசியை 6-7 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசியை கழுவி வடிக்கட்டி செய்தித்தாள் அல்லது முஸ்லின் துணியில் போட்டு 30 நிமிடம் உலரவைக்கவும்.
 2. அரிசியில் தண்ணீர் முழுவது வற்றிப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் அல்லது அரிசியை சூரிய ஒளியிலோ அல்லது மின்விசிறியின் கீழோ காயவைக்க கூடாது. இதை ஈரப்பதம் உள்ள உலர்ந்த இடத்தில் வைக்கவும்.
 3. இப்போது அரவையில் நன்கு கவனமாக அரைத்துக் கொள்ளவும். அசாமில் இந்த அரிசி பாரம்பரியமாக உரல் அல்லது தேகி என்ற இயந்திரங்களில் தூளாக்கப்படும்.
 4. அரவை இயந்திரம் சூடாக இல்லை என்பதை உறுதிசெய்துக் கொள்ளுங்கள் இல்லையெனில் மாவில் கொழகொழப்புத் தன்மை இருக்காது. பயன்படுத்தும் வரை அந்த மாவை ஒரு கிண்ணத்தில் உலர்ந்த மஸ்லின் போட்டு மூடி வைக்கவும்.
 5. எள்ளை 3-4 நிமிடங்கள் நன்கு வறுக்கவும். இதை நல்ல தூளாக ஆகும்படி அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தை அறைவெப்பநிலையில் வைத்து நன்கு நறுக்கிக்கொள்ளவும். வெல்லம் மற்றும் எள்ளை நன்றாக கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
 6. இரும்பு வாணலியை அடுப்பில் வைத்து, பாதி உலர்ந்த அரிசி மாவை ரொட்டியின் அளவிற்கு உங்கள் கைகளினால் போட்டு தட்டவும். அம்மாவை நடுவில் மட்டும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
 7. அரிசி மாவு சூடேற தொடங்கியதும், உள்ளே கலவை வைத்து நிரப்பி ரோல் செய்ய ஏற்றாற்போன்று அனைத்து பக்கங்களையும் மடித்துக் கொள்ளவும். இதை அடுப்பிலிருந்து எடுப்பதற்கு முன்பு குறைந்த தீயில் வைத்து வாட்டவும். இதை போன்றே மீதமுள்ள பித்தாவையும் தயார் செய்யவும். அது தயாரானதும் மொறுமொறுப்பாக இருக்கும்.
 8. நீங்கள் இந்த பித்தாவை காற்று புகாத பெட்டியினுள் 10-12 நாட்கள் வைத்துக் கொள்ளலாம். இதை மிகவும் கவனமாக கையாள வேண்டும் இல்லையெனில் அது உடைந்துவிடக்கூடும்.
 9. இதை டீ அல்லது காபியுடன் பரிமாறவும்.

எனது டிப்:

சிறந்த சுவையுள்ள எள் பித்தா செய்வதற்கு மாவை அரைத்தவுடன் செய்ய தொடங்கவும், தாமதம் செய்வது மாவின் ஓட்டும் தன்மையை குறைக்கக்கூடும்.

Reviews for Asomiya Til Pitha in tamil (0)