வீட்டில் தயாரிக்கப்படும் பீசா மாவு | Homemade Pizza Dough in Tamil

எழுதியவர் BetterButter Editorial  |  26th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Homemade Pizza Dough by BetterButter Editorial at BetterButter
வீட்டில் தயாரிக்கப்படும் பீசா மாவுBetterButter Editorial
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    2

    மணிநேரம்
  • பரிமாறும் அளவு

    8

    மக்கள்

1989

0

வீட்டில் தயாரிக்கப்படும் பீசா மாவு recipe

வீட்டில் தயாரிக்கப்படும் பீசா மாவு தேவையான பொருட்கள் ( Ingredients to make Homemade Pizza Dough in Tamil )

  • 3 1/2ல் இருந்து 4 கப் மாவோடு சற்று அதிகமாக தூவுவதற்கு
  • 1 தேக்கரண்டி சர்க்கரை
  • 2 தேக்கரண்டி உடனடி உலர் ஈஸ்ட்
  • 2 தேக்கரண்டி உப்பு
  • 1 1/2 கப் தண்ணீர், வெதுவெதுப்பானது
  • 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய், கூடுதலா 2 தேக்கரண்டி

வீட்டில் தயாரிக்கப்படும் பீசா மாவு செய்வது எப்படி | How to make Homemade Pizza Dough in Tamil

  1. மாவு, சர்க்கரை, ஈஸ்ட், உப்பு ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக்கொள்ளவும். பெருபகுதி தண்ணீரையும் 2 தேக்கரண்டி எண்ணெயையும் சேர்த்து மாவு உருண்டையாகப் பிசைந்துகொள்க.
  2. மாவு ஒட்டினால் கூடுதலாக மாவு சேர்க்கவும். ஒரு சமயத்தில் ஒரு தேக்கரண்டி என சேர்க்கவும், மாவு கட்டியான உருண்டையாக வரும்வரை. மாவு அதிகம் காய்ந்த நிலையில் இருந்தால் கூடுதலாகத் தண்ணீர் சேர்க்கவும். ஒரு தேக்கரண்டி ஒரு சமயம்.
  3. மாவை சற்றே சுத்தமானத் தரையில் அடித்து மெதுவாக மென்மையான கட்டியான உருண்டையாக பிசைந்துகொள்க.
  4. ஒரு பெரிய பாத்திரத்தை மீதமுள்ள 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணை தடவி மாவை வைத்து பாத்திரத்தை பிளாஸ்டிக் உரையால் மூடி வெப்பமான இடத்தில் இரட்டிப்பாக 1 மணி நேரம் விட்டுவைக்கவும்.
  5. மாவை சுத்தப்படுத்தப்பட்ட தரையில் வைத்து 2 சம பங்குகளாக பிரித்துக்கொள்க.
  6. ஒவ்வொன்றையும் ஒரு சுத்தமானச் சமையல் துண்டால அல்லது பிளாஸ்டி உரையினால் மூடி தேவையான வடிவத்திற்கு உருட்டுவதற்கு முன் 10 நிமிடங்கள் விட்டுவைக்கவும்.

Reviews for Homemade Pizza Dough in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.