லிட்டி சோக்கா (கொண்டைக்கடலை மாவு பூரணம் வைத்த உருண்டைகள்/ உருளைக்கிழங்கு மசித்தது & கத்திரிக்காய் மசித்தது) | Litti Chokha (Chick pea Flour stuffed Balls w/ Potato Mash & Eggplant Mash) in Tamil

எழுதியவர் Taruna Deepak  |  26th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Litti Chokha (Chick pea Flour stuffed Balls w/ Potato Mash & Eggplant Mash) by Taruna Deepak at BetterButter
லிட்டி சோக்கா (கொண்டைக்கடலை மாவு பூரணம் வைத்த உருண்டைகள்/ உருளைக்கிழங்கு மசித்தது & கத்திரிக்காய் மசித்தது)Taruna Deepak
 • ஆயத்த நேரம்

  35

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

407

0

லிட்டி சோக்கா (கொண்டைக்கடலை மாவு பூரணம் வைத்த உருண்டைகள்/ உருளைக்கிழங்கு மசித்தது & கத்திரிக்காய் மசித்தது) recipe

லிட்டி சோக்கா (கொண்டைக்கடலை மாவு பூரணம் வைத்த உருண்டைகள்/ உருளைக்கிழங்கு மசித்தது & கத்திரிக்காய் மசித்தது) தேவையான பொருட்கள் ( Ingredients to make Litti Chokha (Chick pea Flour stuffed Balls w/ Potato Mash & Eggplant Mash) in Tamil )

 • 1/2 தேக்கரண்டி கடுகு
 • 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு (உவர்ப்பைச் சரிசெய்துகொள்ளவும்)
 • சுவைக்கேற்ற உப்பு
 • 1 தேக்கரண்டி நறுக்கிய புதிய கொத்துமல்லி
 • 1 பச்சை மிளகாய் ( என்னுடைய காரமானது, ஒன்றே போதுமானது)
 • 1 தேக்கரணடி பொடியாக நறுக்கிய வெங்காயம்
 • 1/2 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி
 • 1/2 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு
 • 1 கத்திரக்காய், வறுத்து தோல் உரிக்கப்பட்டது
 • பைங்கான் சோக்காவுக்கு (கத்திரிக்காய் மசியப்புக்கு):
 • 1 தேக்கரண்டி கடுகு எண்ணெய்
 • சுவைக்கேற்ற உப்பு
 • 1 தேக்கரண்டி நறுக்கிய புதிய கொத்துமல்லி
 • 1 பச்சை மிளகாய் (என்னுடைய காரமானது, ஒன்றே போதுமானது)
 • 1/2 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி
 • 1/2 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு
 • 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய வெங்காயம்
 • 4-5 நடுத்தர அளவுள்ள உருளைக்கிழங்குகள் (வேகவைத்தது)
 • ஆலு சோக்காவுக்கு உருளைக்கிழங்கு மசியப்புக்கு):
 • 1 மற்றும் 1/2 தேக்கரண்டி கடுகு எண்ணெய்
 • 1 மற்றும் 1/2 - 2 தேக்கரண்டி பூரணம் வைத்து சிவப்பு மிளகாய் ஊறுகாய் மிளகாய்
 • 1 தேக்கரண்டி உவர்ப்பு மாங்காய் ஊறுகாய் மசாலா
 • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
 • 2 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய புதிய கொத்துமல்லி
 • 1 பெரிய பச்சை மிளகாய் (காரத்திற்கேற்ப சரிசெய்துகொள்ளவும்)
 • 2 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய வெங்காயம்
 • 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு
 • 1 தேக்கரண்டி நறுக்கிய இஞ்சி
 • 1/4 தேக்கரண்டி ஓமம்
 • 1/2 தேக்கரண்டி கருஞ்சீரகம்
 • 1 கப் சாட்டு
 • லிட்டி பூரணத்திற்கு:
 • 1 கப் தண்ணீர், தோராயமாக
 • 3 மற்றும் 1/2 தேக்கரண்டி நெய்
 • 1 தேக்கரண்டி உப்பு
 • 1/2 தேக்கரண்டி ஓமம்
 • 3 கப் முழு கோதுமை மாவு
 • லிட்டிக்கு:

லிட்டி சோக்கா (கொண்டைக்கடலை மாவு பூரணம் வைத்த உருண்டைகள்/ உருளைக்கிழங்கு மசித்தது & கத்திரிக்காய் மசித்தது) செய்வது எப்படி | How to make Litti Chokha (Chick pea Flour stuffed Balls w/ Potato Mash & Eggplant Mash) in Tamil

 1. லிட்டி தயாரிப்பதற்கு:
 2. மாவு, ஓமம், உப்பு, நெய்யை ஒன்றாக கலந்துகொள்ளவும். நெய் நன்றாக மாவில் கலந்துள்ளதை விரல்களைப் பயன்படுத்தித் தெரிந்துகொள்க. தேவையான அளவு தண்ணீரைப் பயன்படுத்தி மாவைத் திரட்டுக.
 3. மாவு திரண்டதும், 2-3 நிமிடங்கள் பிசைந்து மூடி குறைந்தது அரை மணி நேரம் வைக்கவும். மாவு மிருதுவாக இருக்கவேண்டும் (மாவு ஓய்வில் இருக்கும்போது, லிட்டிக்கானப் பூரணத்தைத் தயார் செய்துகொள்ளவும், சோக்காவைத் தயாரித்துக்கொள்ளவும்)
 4. பூரணத்திற்கு, அனைத்துப் பொருள்களையும் கைகளால் கலந்துகொள்க (மிளகாயைப் பிசையச் சிரமப்பட்டால் கையுறை அணிந்துகொள்க) எல்லாம் ஒன்றறரக் கலந்து கட்டிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். சுவையை சரிபார்த்தக்கொள்க.
 5. மாவை 14ல் இருந்து 15 சம பாகங்களாகப் பிரித்துக்கொள்க. ஒவ்வொரு பாகத்தையும் உருண்டையாகப் பிடித்து கைகளால் தட்டி அல்லது உருட்டைக் கட்டையால் தோராயமாக மூணரை இன்ச் விட்டத்திற்குச் செய்துகொள்ளவும்.
 6. உருட்டி மாவைக் கையில் எடுத்து உருட்டிய மாவின் மையத்தில் தயாரித்து வைத்துள்ள பூரணத்தை ஒரு கரண்டி வைக்கவும்.
 7. பூரணத்தை மெதுவாக அழுத்தி விளிம்புகளை ஒன்றாகக் கொண்டுவந்து உச்சியில் அழுத்தவும். திருப்பி கூடுதல் மாவை நீக்கிவிடவும்.
 8. கிரீஸ் செய்யப்பட்ட பேக்கிங் ஷீட்டில் எடுத்து வைக்கவும். அனைத்து உருண்டைகளையும் இப்படியாகச் செய்து லிட்டிகளை 170 டிகிரி செல்சியசில் பிரீஹீட் செய்யப்ப்பட்ட ஓவனில் பேக் செய்யவும்.
 9. லிட்டிகளைப் பாதியில் திருப்பி சமமான வெந்திருக்கிறதா என்று பார்க்கவும். லிட்டிக்கள் தோராயமாக 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.
 10. ஆலு சோக்காவுக்கு (உருளைக் கிழங்கு மசிப்பு):
 11. கரண்டியின் பின்புறத்தால் அல்லது மேஷரால் உருளைக்கிழங்கை மசித்துக்கொள்க. உருளைக்கிழங்கு மென்மையான மசிக்கப்படத் தேவையில்லை. அனைத்துப் பொருள்களையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.
 12. கத்திரிக்காய் சோக்காவுக்கு:
 13. கத்திரிக்காயை மசித்து அனைத்துப் பொருள்களையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.

எனது டிப்:

அதிகம் சமைத்துவிட்டால் அது மிக மொறுமொறுப்பாகவும் கடினமானதாகவும் மாறிவிடும். உங்கள் ஓவனைப் பொறுத்து பேக்கிங் நேரத்தை சரிசெய்துகொள்ளவும். இந்த லிட்டியைச் சமைக்கும்போது இரண்டு சோக்காவையும் சுவையேறுவதற்காக எடுத்து வைக்கவும்.

Reviews for Litti Chokha (Chick pea Flour stuffed Balls w/ Potato Mash & Eggplant Mash) in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.