அரிசி பருப்பு சாதம் | Arisi paruppu sadham in Tamil

எழுதியவர் Tina Francis  |  26th Apr 2016  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
  • Photo of Arisi paruppu sadham by Tina Francis at BetterButter
அரிசி பருப்பு சாதம்Tina Francis
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    25

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

249

1

Video for key ingredients

    அரிசி பருப்பு சாதம் recipe

    அரிசி பருப்பு சாதம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Arisi paruppu sadham in Tamil )

    • சுவைக்கேற்ற உப்பு
    • நல்லெண்ணெய் - 1 மற்றும் 1/2 தேக்கரண்டி
    • பெருங்காயம் - 1சிட்டிகை
    • சாம்பார் பொடி -1 மற்றும் 1/2 தேக்கரண்டி
    • மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
    • மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    • தக்காளி - 2
    • பச்சை மிளகாய் பிளந்ததும் - 3
    • வெங்காயம் - 1தேக்கரண்டி
    • கொஞ்சம் கறிவேப்பிலை
    • சீரகம் - 1 தேக்கரண்டி
    • கடுகு - 1/2 தேக்கரண்டி
    • துவரம் பருப்பு - 150 கிராம்
    • அரிசி - 250 கிராம்

    அரிசி பருப்பு சாதம் செய்வது எப்படி | How to make Arisi paruppu sadham in Tamil

    1. அரிசியையும் பருப்பையும் ஒன்றாக 30 நிமிடங்களுக்கு ஊறவைத்துக்கொள்ளவும்.
    2. ஒரு பிரஷர் குக்கரில் நல்லெண்ணெய் சேர்த்தபிறகு கடுகையும் சீரகத்தையும் சேர்க்கவும்.
    3. இப்போது வெங்காயம் கறிவேப்பிலை செர்த்து வெளுக்கும்வரை வதக்கவும். அடுத்து தக்காளி சேர்த்து கூழாகும்வரை வதக்கவும்.
    4. பெருங்காயத்தையும் அனைத்து உலர் பவுடர்களையும் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது அரிசி பருப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
    5. 3ல் இருந்து 4 கப் தண்ணீர் சேர்க்கவும். பிரஷர் குக்கரில் 3 விசிலுக்கு வேகவைக்கவும். அதன்பிறகு ஆவி அடங்கக் காத்திருக்கவும்.
    6. தயிர் மற்றும் காய்கறிக் குழம்போது சூடாகப் பரிமாறவும்.

    எனது டிப்:

    சிறிது விளக்கெண்ணெய் சேர்ப்பது அரிசியை மேலும் சுவையுடைதாக்கும்.

    Reviews for Arisi paruppu sadham in tamil (1)

    Priya Balua year ago

    Reply