வீடு / சமையல் குறிப்பு / ஆரஞ்சு - பனீர் ஐஸ்க்ரீம்

Photo of Orange - Paneer Icecream by Ayesha Ziana at BetterButter
102
3
0.0(0)
0

ஆரஞ்சு - பனீர் ஐஸ்க்ரீம்

May-08-2018
Ayesha Ziana
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஆரஞ்சு - பனீர் ஐஸ்க்ரீம் செய்முறை பற்றி

ஆரஞ்சு பழம், பிரஷ் பனீர், மற்றும் அடிப்படை ஐஸ்க்ரீம் பொருட்கள் வைத்து செய்த சூப்பரான ஐஸ்க்ரீம்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்ரீஸிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கமலா ஆரஞ்சு பழம் 1 பெரியது+1 சிறியது
  2. பசும்பால் 1/2 லிட்டர்
  3. எலுமிச்சை ஒன்று சிறிய சைஸ்
  4. பிரஷ் க்ரீம் 120 மில்லி
  5. கெட்டி தயிர் 100 கிராம்
  6. பொடித்த சீனி 3/4 கப்
  7. வெனிலா எஸ்ஸென்ஸ் 1/4 ஸ்பூன்
  8. பொடித்த பாதாம் தேவைப்பட்டால்

வழிமுறைகள்

  1. பாலைக் கொதிக்க வைத்து எலுமிச்சை சாறு பிழிந்து ஊற்றி, பாலைத் திரிய வைக்கவும். வடிகட்டியின் மேல் ஒரு துணி பரத்தி அதில் திரிந்த பாலை ஊற்றவும். பின்னர் பைப் தண்ணீரில் அதை 2-3 முறை அலசி, துணியோடு பிழிந்து வைக்கவும். பிரஷ் பனீர் தயார்.
  2. பெரிய ஆரஞ்சு பழத்தை ஒரு ஜூஸரில் அரைத்து வடிகட்டிய ஜூஸை எடுக்கவும். சிறிய ஆரஞ்சு பழத்தைத் தோல், விதை நீக்கி பல்ப் பை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
  3. மிக்ஸியில் பனீர், தயிர், பிரஷ் க்ரீமை நன்கு அரைத்து எடுக்கவும். அதனுடன் பிழிந்த ஆரஞ்சு ஜூஸ், பொடித்த சீனி சேர்த்து மீண்டும் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  4. ஒரு பவுலில் அரைத்த கலவையை ஊற்றி, அதனுடன் வெனிலா எஸ்ஸென்ஸ், ஆரஞ்சு பல்ப் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
  5. இதை ஒரு ஐஸ்க்ரீம் கன்டைனரில் ஊற்றி, 6-12 மணி நேரங்கள் ப்ரீசரில் வைக்கவும்.
  6. பின்னர், ஸ்கூப் செய்து ஒரு பவுலில் வைத்து, தேவைப்பட்டால் சிறிது பாதாம் தூவி சில்லெனப் பரிமாறவும்.
  7. சூப்பர் சுவையில் ஆரஞ்சு-பனீர் ஐஸ்க்ரீம் தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவர்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்