வீடு / சமையல் குறிப்பு / இறால் கிரேவி

Photo of Prawn Gravy by விருதை சமையல் at BetterButter
588
4
0.0(0)
0

இறால் கிரேவி

May-09-2018
விருதை சமையல்
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இறால் கிரேவி செய்முறை பற்றி

இறால் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இறால் - 1/2 கிலோ
  2. சின்ன வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
  3. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
  4. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  5. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி  
  6. மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
  7. சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி  
  8. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி  
  9. உப்பு - தேவையான அளவு
  10. கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  11. நல்லெண்ணெய் - 50 Ml

வழிமுறைகள்

  1. இறாலை சுத்தம் செய்து நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும்.
  2. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.
  4. அதனுடன் தக்காளியைப்போட்டு நன்றாக வதங்கியதும் இறாலைப் போட்டு நன்றாக கிளறவும்.
  5. பின்பு அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் பொடி,  சீரகத்தூள் சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து கடாயை மூடி  நன்றாக வேக விடவும்.
  6. இறால் வெந்து எண்ணெய் மேலே வந்ததும் மிளகுத்தூள் சேர்த்து கிளறி  அடுப்பிலிருந்து இறக்கவும்.
  7. கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
  8. சுவையான இறால் கிரேவி தயார்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்