வீடு / சமையல் குறிப்பு / ஆட்டுக்கால் குழம்பு

Photo of Aatukaal kuzhambu by விருதை சமையல் at BetterButter
813
4
0.0(0)
0

ஆட்டுக்கால் குழம்பு

May-09-2018
விருதை சமையல்
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆட்டுக்கால் குழம்பு செய்முறை பற்றி

ஆட்டுக்கால் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆட்டுக்கால் - 4
  2. சின்ன வெங்காயம் - 100 கிராம்
  3. இஞ்சி - சிறிய துண்டு (தட்டி வைத்துக் கொள்ளவும்)
  4. காய்ந்த மிளகாய் - 10
  5. மிளகு - 1/2 தேக்கரண்டி
  6. கொத்தமல்லி விதை - 2 தேக்கரண்டி
  7. சீரகம் - 1 தேக்கரண்டி
  8. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  9. தேங்காய்ப்பால் - 1/2 மூடி
  10. நல்லெண்ணெய் - 5 தேக்கரண்டி
  11. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஆட்டுக்காலை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
  2. குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி, ஆட்டுக்கால், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும்.
  3. ஐந்து விசில் வந்ததும் குக்கரை இறக்கவும்.
  4. மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து மிக்சியில் இட்டு நைசாக அரைத்து குக்கரில் பொடியை சேர்த்து தேங்காய்ப்பால் சேர்த்து கிளறவும்.
  5. தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வந்ததும் இறக்கவும்.
  6. சுவையான ஆட்டுக்கால் குழம்பு தயார்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்