மாட்டிறைச்சி வறுவல் (பீஃப்) | Mince fry (Beef) in Tamil

எழுதியவர் Shalin Macartoon  |  28th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Mince fry (Beef) by Shalin Macartoon at BetterButter
மாட்டிறைச்சி வறுவல் (பீஃப்)Shalin Macartoon
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

71

0

மாட்டிறைச்சி வறுவல் (பீஃப்) recipe

மாட்டிறைச்சி வறுவல் (பீஃப்) தேவையான பொருட்கள் ( Ingredients to make Mince fry (Beef) in Tamil )

 • 1/2 கிலோ நறுக்கப்பட்ட பீஃப் அல்லது மட்டன்/சிக்கன்
 • 3 தேக்கரண்டி எண்ணெய்
 • 2 நடுத்தர அளவுள்ள வெங்காயம்
 • 1 பெரிய அளவுள்ள தக்காளி
 • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
 • முழு கிராம்பு (5)
 • இலவங்கப்பட்டை - 1 இன்ச் பட்டை
 • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
 • 1 தேக்கரண்டி மல்லித்தூள்
 • 1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
 • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1 தேக்கரண்டி கரம் மசாலாப்பொடி/ கறி பவுடர்
 • சுவைக்கேற்ற உப்பு

மாட்டிறைச்சி வறுவல் (பீஃப்) செய்வது எப்படி | How to make Mince fry (Beef) in Tamil

 1. எண்ணெயைச் சூடுபடுத்தி கிராம்பு இலவங்கப்பட்டையைச் சேர்க்கவும்.
 2. ஒரு சிட்டிகை உப்புடன் சேர்த்து வெங்காயத்தை சேர்த்த வெளுக்கும்வரை வதக்கவும். அதன்பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
 3. அனைத்து தூள்களையும் (கரம் மசாலாவைத் தவிர) மிளகாய், மஞ்சள், சீரகம், மல்லி, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். கிட்டத்தட்ட 4 நிமிடங்கள் வதக்கவும்.
 4. மசாலா வெந்ததும், பச்சைக் கறியைச்சேர்த்து மசாலாவைத் தடவவும். அடுத்து தக்காளியைச் சேர்க்கவும்.
 5. 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடவும். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் வேகட்டும்.
 6. இப்போது கரம் மசாலா சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.

Reviews for Mince fry (Beef) in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.