வீடு / சமையல் குறிப்பு / மட்டன் பிரியாணி

Photo of Mutton biriyani by hajirasheed haroon at BetterButter
532
6
0.0(0)
0

மட்டன் பிரியாணி

May-09-2018
hajirasheed haroon
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மட்டன் பிரியாணி செய்முறை பற்றி

இஸ்லாமிய பண்டிகைகளிலும் திருமணம் நிகழ்ச்சிகளில் செய்ய கூடிய பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மட்டன் 1கிலோ
  2. பாஸ்மதி அரிசி 1கிலோ
  3. பட்டை லவங்கம் ஏலக்காய்
  4. எண்ணெய் 400 மில்லி
  5. உப்பு
  6. நெய் 50கிராம்
  7. தயிர் 1/4கப்
  8. எலுமிச்சம் பழம் 1
  9. மஞ்சள் தூள் 1பின்ச்
  10. மிளகாய் தூள் 4ஸ்பூன்
  11. பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்த மசாலா தூள் 2ஸ்பூன்
  12. வெங்காயம் 1கிலோ
  13. தக்காளி 1/2 கிலோ
  14. இஞ்சி பூண்டு விழுது 400 கிராம்
  15. பச்சை மிளகாய் 10
  16. கொத்தமல்லி 1கட்டு
  17. புதினா 1கட்டு
  18. தண்ணீர்

வழிமுறைகள்

  1. குக்கரில் மட்டன் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 5 விசில் வேக வைக்கவும்
  2. காய்கறிகளை நறுக்கி கொள்ளவும்
  3. ஒரு பெரிய அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து வெடிக்க விடவும்
  4. வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி அதில் அடுத்தடுத்து இஞ்சிபூண்டு விழுது,தக்காளி பச்சை மிளகாய் புதினா மல்லி இலை சேர்த்து வதக்கவும் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்
  5. அரிசியை அலந்து தண்ணீரில் ஊற வைக்கவும்
  6. வெங்காய மசாலா கலவையில் மிளகாய் பட்டை ஏலக்காய் கிராம்பு(கரம் மசாலா ) மசாலா தூள்களை சேர்க்கவும் வேக வைத்த கறியை சேர்த்து தயிர் ஊற்றி எலுமிச்ச சாறு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  7. தண்ணீர் கொதி வந்ததும் அரிசி உப்பு சேர்த்து மூடி வேக விடவும்
  8. சாதம் முக்கால் பாகம் வெந்தவுடன் தோசைக் கல்லை வைத்து தண்ணீர் ஊற்றி அதில் பிரியாணி செய்த சட்டியை மேலே வைத்து தம் வைக்கவும்
  9. தம் வைக்கும் போது நெய் கேசரி பவுடரை தண்ணீரில் கலந்து சுற்றி ஊற்றி மூடி விட வேண்டும் தம்மில் குறைந்தது 20 நிமிடம் வைக்க வேண்டும்
  10. டேஸ்ட்டான சூப்பரான பிரியாணி ரெடி எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்