Photo of Karivadagam by Tina Francis at BetterButter
2756
9
4.0(0)
0

கறிவடகம்

Apr-29-2016
Tina Francis
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சின்ன வெங்காயம் - 1.5 கப்
  2. பூண்டு - 1/2 கப்
  3. கறிவேப்பிலை - 2 தேக்கரண்டி
  4. உளுத்தம்பருப்பு -1/4 கப்
  5. கடுகு - 1 தேக்கரண்டி
  6. துவரம்பருப்பு - 1 தேக்கரண்டி
  7. சீரகம் - 1.5 தேக்கரண்டி
  8. வெந்தயம் - 3/4 தேக்கரண்டி
  9. சிவப்பு மிளகாய்த் தூள் - 1தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  11. உப்பு
  12. விளக்கெண்ணெய் - 2 தேக்கரண்டி
  13. பெருங்காயம் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெங்காய மற்றும் பூண்டின் தோலை உரித்து, கறிவேப்பிலையை நறுக்கிக்கொள்ளவும்.
  2. உளுந்தை 30 நிமிடங்கள் உறவைக்கவும்.
  3. அனைத்துப் பொருள்களையும் ஒரு பிளண்டரில் கலந்து கரடுமுரடானச் சாந்தாகத் தயாரிக்கவும்.
  4. இப்போது இந்தக் கலவையை ஒரு பெரிய பாத்திரத்தில் 24 மணி நேரங்களுக்கு பாதியளவு கெட்டியாகும்வரை விட்டுவைக்கவும்.
  5. 2ஆம் நாள், கொஞ்சம் விளக்கெண்ணெய் சேர்த்து இந்தக் கலவையை உருண்டை பிடித்து வெயிலில் வைக்கவும். அடுத்தநாள் உங்கள் உள்ளங்கைகளில் விளக்கெண்ணெய் எடுத்து கெட்டியான உருண்டைகள் பிடிக்கவும், இதே செயலை 4 நாட்களுக்கு மேற்கொள்ளவும்.
  6. 4ஆம் நாளுக்குப் பிறகு, வெயிலில் உருண்டைகளை 2 நாட்களுக்கு வைக்கவும்.
  7. விளக்கெண்ணெய் பதனப்படுத்தியாகச் செயல்படும். இந்த உருண்டைகளை காற்றுப்புகாத பாத்திரத்தில் வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்