வீடு / சமையல் குறிப்பு / தளப்பாகட்டி மட்டன் பிரியாணி

Photo of Thalapakatti mutton briyani by Nancy Samson at BetterButter
295
2
0.0(0)
0

தளப்பாகட்டி மட்டன் பிரியாணி

May-11-2018
Nancy Samson
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தளப்பாகட்டி மட்டன் பிரியாணி செய்முறை பற்றி

இது இஸ்லாமிய பிரியாணி போல் அல்லாமல் தென் இந்திய பகுதி ருசி கொண்டது. சீரக சம்பா அரிசியில் சமைக்கப்படுவது. தம் பிரியாணி வகையை சேர்ந்தது. எனது இன்ஸ்டா தோழியின் மூலமாக கற்றுக்கொண்டது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் - 1/2 கிலோ
  2. சீரக சம்பா அரிசி - 2கப்
  3. இஞ்சி பூண்டு விழுது - 1/2 + 2மேசைக்கரண்டி
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  5. கல் உப்பு - 1/2 + 2 தேக்கரண்டி
  6. தண்ணீர் - 4 கப்
  7. பட்டை - 2 துண்டு
  8. கிராம்பு - 5
  9. ஏலக்காய்- 3
  10. ஜாதிக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
  11. ஜாதிபத்ரி - 1/4 பாகம் உடைத்தது
  12. மிளகு - 1/2 தேக்கரண்டி
  13. அன்னாசி பூ - 2 இதழ்கள்
  14. மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
  15. மல்லித்தூள் - 1 மேசைக்கரண்டி
  16. நறுக்கிய சின்ன வெங்காயம்- 2 கப்
  17. நறுக்கிய தக்காளி - 1 கப்
  18. நறுக்கிய கொத்தமல்லி இலை - 1 கப்
  19. நறுக்கிய புதினா - 1 கப்
  20. கீறிய பச்சை மிளகாய் - 5
  21. புளிப்பில்லாத கெட்டி தயிர் - 1/4 கப்
  22. பிரிஞ்சி இலை - 2
  23. சீரகம் - 1 தேக்கரண்டி
  24. சோம்பு - 1 தேக்கரண்டி
  25. நெய் - 3 மேசைக்கரண்டி
  26. எண்ணெய் - 1/2 கப்
  27. எலுமிச்சை சாறு - அரை பழத்தில் எடுத்தது

வழிமுறைகள்

  1. மட்டனை கழுவி சுத்தம் செய்து , 1/2 தேக்கரண்டி உப்பு, 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து குக்கரில் 5 அல்லது 6 விசில் வைத்து இறைச்சி மென்மையாகும்வரை வேக வைக்கவும்.
  2. வேகவைத்த இறைச்சியை அதன் சாறுடன் தனியே எடுத்து வைக்கவும்.
  3. இறைச்சி வேகும் நேரத்தில், கொடுக்கப்பட்ட அளவுகளில் உள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் தூள், மிளகு, ஜாதிபத்ரி, அன்னாசி பூ, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் பொடி செய்து கொள்ள வேண்டும்
  4. அரிசியை நன்கு கழுவி 45 நிமிடங்கள் ஊற வைக்கவும்.(சீரக சம்பா இல்லாததால் நான் பாசுமதி உபயோகித்துள்ளேன், சீரக சம்பா அரிசியே இதற்கு உகந்தது)
  5. ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடு ஏறியதும், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரிஞ்சி இலை, சீரகம், சோம்பு சேர்க்கவும்.
  6. சீரகம் சோம்பு பொரிந்ததும், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. இஞ்சி பூண்டு விழுது பொன்னிறமாக வதங்கியதும், நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய கொத்தமல்லி புதினா இலைகளை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
  8. இப்போது நறுக்கிய தக்காளி, கெட்டி தயிர் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
  9. வதக்கிய கலவை நன்கு ஒன்றோடு ஒன்று கலந்து மசிந்து எண்ணெய் பிரிந்து வரும்போது அரைத்த மசாலா தூளை சேர்த்து 2நிமிடங்கள் வதக்கவும்.
  10. பின் அவித்த இறைச்சியை நீரை வடித்து, வதக்கிய மசாலாவுடன் சேர்த்து 2 நிமிடம் மூடி வைக்கவும்.
  11. இறைச்சியின் சூப்பினை அரிசியை அளந்த அதே அளவையில் 4கப் அளந்து இறைச்சி மசாலாவில் சேர்த்து மூடி போட்டு கொதிக்க வைக்கவும். சூப் போதவில்லை என்றால் நீர் சேர்த்து கொள்ளலாம்.
  12. ஊற்றிய நீர் அல்லது சூப் நன்றாக கொதித்து வரும்போது உப்பு சரிப்பார்த்து ஊறவைத்த அரிசியை சேர்த்து கொதிக்கவிடவும்.
  13. அரிசி முக்கால் பதம் வெந்ததும், அரை எலுமிச்சை பழ சாறு பிழிந்து, அரிசி உடையாமல் கவனமாக கிளறி காற்று புகாமல் ஒரு மூடி போட்டு மூடவும்.
  14. அந்த மூடியின் மேல் ஒரு கனமான பாத்திரத்தில் 3/4 பாகம் நீர் நிரப்பி வைக்கவும். மிளகு, ரசம் நுணுக்க பயன் படும் சிறிய கல் குழவியை பயன்படுத்தலாம்.
  15. தீயை குறைந்த அளவுக்கு மாற்றி 45 நிமிடங்கள் தம்மில் சமைக்கவும்.
  16. 45 நிமிடங்கள் கழித்து, மூடியை நீக்கிவிட்டு கவனமா கிளறி நெய் நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்