வீடு / சமையல் குறிப்பு / வஞ்சிர மீன் பிரியாணி

Photo of King fish biriyani by Shaima Fathima at BetterButter
473
3
0.0(0)
0

வஞ்சிர மீன் பிரியாணி

May-12-2018
Shaima Fathima
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

வஞ்சிர மீன் பிரியாணி செய்முறை பற்றி

மிகவும் சுவையான இந்த பிரியாணியை அனைவரும் முயற்சி செய்து பாருங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வஞ்சிர மீன் -1 கிலோ
  2. பெரிய வெங்காயம் - 4
  3. தக்காளி - 1
  4. பச்சை மிளகாய் - 2
  5. இஞ்சி பூண்டு விழுது - 2 மேஜைக்கரண்டி
  6. பாஸ்மதி அரிசி- 3 கப்
  7. பட்டை- சிறியதுண்டு 3
  8. ஏலக்காய் - 4
  9. கிராம்பு - 4
  10. நறுக்கிய மல்லிக்கீரை&புதினா - 3 கைப்பிடி
  11. நெய்- 4 மேஜைக்கரண்டி
  12. எண்ணை-1&1/2கப்
  13. பிரியாணி குழம்புக்குரிய மசாலா தேவையானவை :
  14. மஞ்சள் -1/4 தேக்கரண்டி
  15. மிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி
  16. மல்லித்தூள்- 2 தேக்கரண்டி
  17. சோம்புத்தூள்- 2 தேக்கரண்டி
  18. ஜீரகம்- 1 தேக்கரண்டி
  19. நல்லமிளகு தூள்-1 தேக்கரண்டி
  20. கரம் மசாலாதூள்- 1/2 தேக்கரண்டி
  21. உப்பு -தேவைக்கு
  22. பிரியாணி மசாலாவில் சேர்ப்பதற்க்கு அரைத்தெடுக்கும் மசாலா தேவையானவை :
  23. புதினா -1 கைப்பிடி
  24. ஜீரகம்
  25. பட்டை- 2 சிறியதுண்டு
  26. பச்சை மிளகாய் - 2
  27. மீன் பொரித்தெடுப்பதற்குரிய மசாலா தேவையானவை :
  28. மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
  29. மிளகாய்தூள்- 1&1/2 தேக்கரண்டி
  30. சோம்புத்தூள்- 1 தேக்கரண்டி
  31. நல்ல மிளகுதூள்- 1/2 தேக்கரண்டி
  32. உப்பு-தேவைக்கு

வழிமுறைகள்

  1. முதலில் மீனை சுத்தப்படுத்தி துண்டுகளாக்கி அதில்   பொரித்தெடுப்பதற்க்குரிய மசாலாவை தடவி அரை மணிநேரம் வைக்கவும்.
  2. வெங்காயம்,தக்காளி கட் பண்ணிஎடுக்கவும். நான்கு வெங்காயம் நறுக்கியதில் ஒருவெங்காத்தை  கோல்டன் கலரில் பொரித்து எடுக்கவும்.( இதே எண்ணையை மீன் பொரித்தெடுக்க பயன்படுத்தலாம்)
  3. மிக்ஸியில் அரைப்பதற்க்குஎடுத்து வைத்திருக்கும் புதினா ,பச்சை மிளகு,ஜீரகம்,பட்டை இவற்றை கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து மீனை பொரித்தெடுக்கவும்.
  5.  பின்னர் அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணை ஊற்றி ;இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பத்து செகன்ட் கழித்து வெங்காயம், தக்காளி ,பச்சை மிளக,பட்டை, ஏலக்காய் ,கிராம்பு, உப்பு சேர்த்து வதக்கவும் .
  6. நன்றாக வதங்கியதும் அதில் எடுத்து வைத்திருக்கும் மசாலாவையும் அரைத்து வைத்திருக்கும் மசாலாவையும் சேர்த்து கொதிக்கவிட்டு பத்து நிமிடம் கழிந்து எண்ணைய் தெளிந்து வரும்போது பொரித்தெடுத்த மீனை போட்டு பொடியாமல் லேசாக கிளறி விட்டு ஒரு கைப்பிடி மல்லி&புதினாசேர்த்து சிறிய தீயில் அடிபிடிக்காமல் 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
  7. பின்னர் அரிசியை 3 முறை நன்றாக கழுவி 5 நிமிடம் தண்ணீரில் ஊறவிடவும்.
  8. அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டரை கப் தண்ணீர்விட்டு தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும் போது ஒரு எலுமிச்சை சாறு பிழிந்து விட்டால் சோறு ஒட்டாமல் இருக்கும்.அதில் அரிசியை போட்டு தண்ணீர் வற்றியவுடன்  சோறை இனி ஒருபாத்திரத்தில் மாற்றி எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  9. பின்னர் சோறுவைத்த பாத்திரத்தில் ஒரு கரண்டி நெய் விட்டு ; அதில் ஒரு அடுக்கு சோறு அதன் மேல் மீன்மசாலாவை போட்டு அதன் மேல் கொஞ்சம் நறுக்கிய மல்லி,புதினா கொஞ்சம் கரமசாலா பவுடர் தூவிவிடவும்.
  10. இதுபோல் மீதி இருக்கும் சோறு மீன் மசாலாவை அடுக்காக போட்டு அதன் மேல் மீதம் இருக்கும் நெய்யையும் ஊற்றி மூடி வைத்து 5 நிமிடம் சிறிய தீயில் தம் போடவும்.திறந்து பார்க்கும் போது ஆவி வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு பத்து நிமிடம் கழிந்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்