Photo of Authentic chicken pepper fry by Umamaheswari Chellamuthu at BetterButter
1267
2
0.0(1)
0

Authentic chicken pepper fry

May-12-2018
Umamaheswari Chellamuthu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • இந்திய
  • பான் பிரை
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நாட்டுகோழி / சாதாரண கோழி -1/2 கிலோ
  2. நல்லெண்ணெய் -2 ஸ்பூன்
  3. பட்டை -1 துண்டு
  4. கிராம்பு -2
  5. சின்ன வெங்காயம் -5
  6. இஞ்சி -சிறு துண்டு
  7. பூண்டு -5 பற்கள்
  8. தேங்காய் -1 கீற்று
  9. கருவேப்பிலை -5 இலை
  10. மல்லித்தளை -1 கொத்து
  11. பச்சை மிளகாய் (சிறியது)-1
  12. குறுமிளகு (முழுதாய்)-1 கைப்பிடி
  13. உப்பு -தேவையான அளவு
  14. மஞ்சள்தூள் -1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. பட்டை,கிராம்பு,சின்ன வெங்காயம்,இஞ்சி,பூண்டு,கருவேப்பிலை,மல்லித்தளை,மிளகு,தேங்காய்,பச்சைமிளகாய் இவை அனைத்தையும் ஒன்றாக மைய அரைக்கவும்
  2. சிக்கன் துண்டுகளை மஞ்சள் தேய்த்து நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
  3. அடி கனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய விடவும் (நான் பயன் படுத்துவது இரும்பு வாணலி)
  4. அதில் அரைத்த கலவையை சேர்த்து பச்சை வாசணை போகும் வரை வதக்கவும்
  5. அதில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும்
  6. சிறிது வதக்கிய பிறகு தேவையான அளவு கல் உப்பு /பொடி உப்பு சேர்க்கவும்
  7. நன்கு வதக்க நீர் விடும்
  8. அதை நன்றாக கிளறி மூடி போட்டு மிதமான தீயில் நன்கு வேக விடவும்
  9. தேவை எனில் சிக்கன் வேக சிறிது நீர் சேர்க்கலாம்
  10. நன்கு வெந்த பின்பு நீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும்
  11. எண்ணெய் நன்கு பிரிந்து கோழி நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து கருவேப்பிலை தூவி பறிமாறலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
May-12-2018
Pushpa Taroor   May-12-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்