வீடு / சமையல் குறிப்பு / பாரம்பரிய கிராமத்து மீன் குழம்பு

Photo of Village style fish curry by Rabia Hamnah at BetterButter
559
4
0.0(0)
0

பாரம்பரிய கிராமத்து மீன் குழம்பு

May-12-2018
Rabia Hamnah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாரம்பரிய கிராமத்து மீன் குழம்பு செய்முறை பற்றி

நாவூர வைக்கும் கம கமக்கும் பாரம்பரிய கிராமத்து மீன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மீன் துண்டுகள்-10
  2. நல்லெண்ணெய்-3 டேபிள் ஸ்பூன்
  3. கடுகு-1ஸ்பூன்
  4. சின்ன வெங்காயம்-5 நறுக்கியது
  5. தக்காளி-1 நறுக்கியது
  6. கறிவேப்பிலை-1 கொத்து
  7. புளி- எலுமிச்சை அளவு
  8. உப்பு-தேவைக்கு
  9. அரைக்க வேண்டியவை:
  10. சின்ன வெங்காயம் -10
  11. தேங்காய் துருவல்-1 கப்
  12. வருத்து அரைக்க வேண்டியவை:
  13. வற்றல்-6-8
  14. மல்லி-2 டேபிள் ஸ்பூன்
  15. சீரகம்- 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைந்து வைக்கவும்.
  2. அரைக்க வேண்டிய தேங்காய்+ வெங்காயம் சேர்த்து அரைத்து வைக்கவும்.
  3. வறுக்க வேண்டியவற்றை எண்ணெய் சேர்க்காமல் கொஞ்சம் வருத்து தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து வைக்கவும்.
  4. மீனுடன் புளி கரைசல், உப்பு சேர்த்து 15நிமிடம் வைத்து விடவும்.
  5. பின்பு அரைத்து இரண்டு கலவைகளையும் மீனுடன் சேர்க்கவும்.
  6. மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி நல்லெண்ணெய் சேர்க்கவும்.
  7. பின்பு நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை இலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  8. தேவைக்குகு உப்பு சேர்த்து மசிய வேக விடவும்.
  9. பின்பு வதக்கியவற்றை மீனுடன் சேர்த்து அடுப்பில் ஏற்றி குறைந்த தணலில் வேக விடவும்.
  10. மீன் வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அனைத்து விடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்