மஸ்தி பாசந்தி புலாவ்/ இனிப்பு மஞ்சள் புலாவ் | Misti Basanti pulao/Sweet yellow pulao in Tamil

எழுதியவர் Nilanjana Bhattacharjee Mitra  |  30th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Misti Basanti pulao/Sweet yellow pulao by Nilanjana Bhattacharjee Mitra at BetterButter
மஸ்தி பாசந்தி புலாவ்/ இனிப்பு மஞ்சள் புலாவ்Nilanjana Bhattacharjee Mitra
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  40

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

1632

0

மஸ்தி பாசந்தி புலாவ்/ இனிப்பு மஞ்சள் புலாவ் recipe

மஸ்தி பாசந்தி புலாவ்/ இனிப்பு மஞ்சள் புலாவ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Misti Basanti pulao/Sweet yellow pulao in Tamil )

 • பாஸ்மதி அரிசி 2 கப்
 • முந்திரி பருப்பு 2-3 தேக்கரண்டி
 • உலர் திராட்சை 2-3 தேக்கரண்டி
 • நெய் 3-4 தேக்கரண்டி
 • சர்க்கரை 6-7 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
 • பச்சை ஏலக்காய் 3-4
 • இலவங்கப்பட்டை 1/2 இன்ச் குச்சி
 • கிராம்பு 3-4
 • பிரிஞ்சி இலை 2

மஸ்தி பாசந்தி புலாவ்/ இனிப்பு மஞ்சள் புலாவ் செய்வது எப்படி | How to make Misti Basanti pulao/Sweet yellow pulao in Tamil

 1. அரிசியை 1 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
 2. நெய்யுடன் ஒரு கடாயைச் சூடுபடுத்தி முந்திரி பருப்பு உலர் திராட்சை சேர்த்து சற்றே வறுத்துக்கொள்ளவும். இப்போது பிரிஞ்சி இலை, பச்சை ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு சேர்க்கவும்.
 3. நல்ல வாசனை வெளிவர ஆரம்பித்ததும், அரிசி, சர்க்கரை, மஞ்சள் தூள், சுவைக்கேற்ற உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும்.
 4. 3 மற்றும் 1/2கப் தண்ணீர் சேர்த்து கடாயை மூடவும். அதிக தீயில் 5 நிமிடங்களுக்கு வைத்து, அதன்பின்னர் தீயைக் குறைத்து 20-25 நிமிடங்கள் அரிசி (புலாவ்) முறையாக வேகும்வரை வேகவைக்கவும்.
 5. 30-40% வேகும் வரை புலாவைக் கிளரவேண்டாம்.
 6. மஸ்தி பிரியாணி புலாவை பெங்காலி கோசா மங்ஷோ அல்லது அலூர் தூமுடன் பரிமாறவும்.

எனது டிப்:

உங்கள் சுவைக்கேற்றவாறு சர்க்கரையின் அளவு கூட்டவோ அதிகரிக்கவோ செய்யலாம். அருமையானக் கூடுதல் நறுமணத்திற்குப் பன்னீர்தண்ணீரையும் சேர்க்கலாம்.

Reviews for Misti Basanti pulao/Sweet yellow pulao in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.