Photo of Clay pot Non Veg full meals by Juvaireya R at BetterButter
629
16
0.0(3)
0

Clay pot Non Veg full meals

May-14-2018
Juvaireya R
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
180 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Clay pot Non Veg full meals செய்முறை பற்றி

ஆட்டுக்கறி பிரியாணி,எலும்பு தால்ட்சா,ஈரல் வறுவல்,மிளகுகறி,கோழிசாப்ஸ்,மூளை மசாலா,ஆட்டுக்கறி கோலா உருண்டை என 7 வகையான கறி வகைகள். என் குடும்ப உணவு மற்றும் இவையணைத்தையும் நான் மண்பானையிலே சமைத்துள்ளேன் எனவே கூடுதல் ரூசியான விருந்து.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நறுக்கிய பெரிய வெங்காயம் - 5
  2. பச்சை மிளகாய் -5
  3. நறுக்கிய தக்காளி -6
  4. அரைத்த வெங்காய விமுது - 1 கப்
  5. இஞ்சி-பூண்டு விழுது -1/2 கப்
  6. சீரக தூள் -1 தேக்கரண்டி
  7. மிளகுதூள் - 4 மேஜைக்கரண்டி
  8. மிளகாய்தூள் - 1/4 கப்
  9. தனியா பொடி - 1 மேஜைக்கரண்டி
  10. கொத்துமல்லி ,புதினா - 1 கப்
  11. தயிர் - 250 மி.லி
  12. எலும்பச்சழம் - 1/2
  13. சீரகசம்பா பிரியாணி அரிசி - 1/2 கிலோ
  14. ஆட்டுக்கறி- 3/4 கிலோ
  15. ஆட்டு மூளை - 2
  16. ஆட்டு ஈரல் -250 கி.கி
  17. கோழிக்கறி -1/2 கிலோ
  18. கோழிச்சப்பை - 4 துண்டு
  19. நறுக்கிய சின்ன வெங்காயம் - 1/2 கப்
  20. எண்ணெய் - 200 மி.லி
  21. நெய் - 50 மி.லி
  22. பொரிதெடுக்க தேவையான எண்ணெய்
  23. சோம்பு பொடி -1/2 தேக்கரண்டி
  24. சோம்பு - 1/2 தேக்கரண்டி
  25. 2 தேக்கரண்டி சோள மாவு
  26. கோழிப்பொடி - 2
  27. தேவையான அளவு உப்பு
  28. கத்திரிக்காய்-1/4 கி.கி
  29. மாங்காய் - 2 துண்டு
  30. துவரம் பருப்பு - 75 கி.கி
  31. கடலை பருப்பு - 50 கி.கி
  32. தேங்காய் விழுது - 2 தேக்கரண்டி
  33. நறுக்கிய தேங்காய் - 2 தேக்கரண்டி
  34. கறிவேப்பிலை சிறிதளவு
  35. 1/4 கிலோ கைமா கறி(கொத்துக்கறி)
  36. 3 தேக்கரண்டி புளிக்கரைசல்
  37. 3 தேக்கரண்டி பொட்டுகடலை
  38. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பிரியாணி செய்வதற்க்கு அடிகனமா மண்சட்டியை அடுப்பில் வைக்கவும்.
  2. சட்டி காய்ந்ததும் 50மி.லி நெய்+ 75 மி.லி எண்ணெய் சேர்க்கவும்
  3. எண்ணெய் காய்ந்ததும் 1நறுக்கிய பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய் சேர்க்கவும்.
  4. பின் 3நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் 1/4 கப் வெங்காய விழுது சேர்க்கவும்.
  5. பின் 2 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  6. பின் 2 தேக்கரண்டி மிளகாய் பொடி,1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
  7. நறுக்கிய கொத்துமல்லி,புதினா சேர்த்து வதக்கவும்.
  8. எண்ணெய் கக்கி வரும் சமயம் 1/2 கி அரைவேக்காடு வேகவைத்த ஆட்டிரைச்சியை சேர்க்கவும்.
  9. பின் 1/4 கப் தயிர் சேர்த்து கிளறவும்.
  10. பின் 1:2 என்ற கணக்கில் தண்ணீர் ஊற்றவும். 1 பங்கு அரிசிக்கு 2 பங்கு தண்ணீர்.
  11. 1/2 எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
  12. அரிசியை கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்துக் கொள்ளவும்.
  13. தண்ணீர் கொதித்து கறி வேந்ததும். அரிசியை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
  14. அரிசி ஒரளவிற்க்கு வெந்ததும் மெதுவாக சுற்றுலும் கிளறவும்.
  15. பின் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து வாழஇலையினால் தம் போடவும் அதன் மேல் சூடான பாத்திரத்தை வைக்கவும்
  16. அடுப்பை சின்னதாக 15 நிமிடம் தம்மில் வைக்கவும்.
  17. பின் 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து 10 நிமிடம் கழித்து பானையை திறந்து கிளறவும்.
  18. மண்பானை தமௌ பிரியாணி தயார்.
  19. தால்ட்சா செய்ய துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து அதனுடன் 4 எலும்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
  20. பின் ஒருமண் பானையில் கத்திரிக்காய், மாங்காய்,3தக்காளி சேர்த்து அதனுடன் மிளகாய் பொடி,மஞ்சள் பொடி,கரம் மசலா, உப்பு சேர்த்து வேகவிடவும்.
  21. பின் வேந்ததும் பருப்பையும் எலும்பையும் சேர்த்து ஒரு கொதிவிடவும்.
  22. சிறிதளவு கொத்தமல்லி,புதினா சேர்க்கவும். 3 மேஜைக்கரண்டி புளி கரைசல் சேர்க்கவும்
  23. 3 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். தால்ட்சா தயார்.
  24. ஈரல் வறுவல் செய்ய ஒரு மண்ச்சட்டி எடுத்து அடுப்பை பற்றவைக்கவும்.
  25. 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் 3மேஜைக்கரண்டி சின்ன வெங்காயம் சேர்க்கவும்
  26. பின் 1 கீறிய பச்சை மிளகாய் சேர்க்கவும். வதங்கியதும் மிளகு தூள்சீரகதூள் சேர்த்து வதக்கவும்.
  27. பின் உப்பு சேர்த்து கழுவிய ஈரலை சேர்த்து வதக்கவும். சிறிது ததண்ணீர் ஊற்றி 3-4 நிமிடம் வேகவைத்து பின் கொத்துமல்லி சேர்த்து இறக்கவும்.
  28. ஈரல் வறுவல் தயார்.
  29. மிளகு கறி செய்ய மண்ச்சட்டியை அடுப்பில் வைத்து 2தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து
  30. 3 மேஜைக்கரண்டி சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். 2காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  31. பின் மிளகுதூள்,சீரகதூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  32. நன்கு வதங்கியதும் வேகவைத்த 1/4 கி ஆட்டுக்கறி சேர்த்து வதக்கவும்.
  33. தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றவும்.
  34. தண்ணீர் வத்தியதும் 2தேக்கரண்டி நறுக்கிய தேங்காய் சில்லு சேர்த்து 1நிமிடம் வதக்கி இறக்கினால் மிளகு கறி தயார்.
  35. மூளை மசலா செய்ய மூளையை கழுவி சுத்தம் சேய்யவும்.
  36. ஒரு மண்பாத்திரத்தில் சிறிது ததண்ணீர் சேர்த்து அதில் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து மூளையை வேகவிடவும்
  37. மூளை இருபக்கமும் வேந்ததும் அதில் மிளகுதூள்,மல்லித்தூள் சேர்த்து உப்பு சேர்த்து மெதுவாக கிளறி
  38. அதில் ஓரிரு கறிவேப்பிலை சேர்த்து இறகக்கினால் மூளை மசாலா தயார்.
  39. கோல உருண்டை செய்ய கைமா கறியை கழுவி எடுக்கவும்
  40. பின் அதில் சோம்பு, 2பச்சை மிளகாய்,கரமசலாதூள் உப்பு சேர்க்கவும் இதனுடன் பொட்டுகடலை பொடி 2 தேக்கரண்டி சேர்க்கவும்
  41. 1 தேக்கரண்டி வெங்காய விழுது,1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைக்கவும்
  42. பின் கோல உருண்டைகளை உருட்டி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் பொன்னிறம் வரும் வரை பொறித்தேடுக்கவும்.
  43. ஆட்டுறைச்சி கோல உருண்டை தயார்.
  44. சிக்கன் சப்பை பொறிக்க ஒரு பாத்திரத்தில் 4 சப்பைகளை சேர்த்து சோள மாவு 2-3 தேக்கரண்டி சேர்த்து
  45. சிறிது கரமசலா சேர்த்து, சிறிது இஞ்சிபூண்டு சேர்த்து 3மேஜைக்கண்டி தயிர் சேர்த்து
  46. சிக்கன் 65 தூள் சேர்த்து உப்பு சேர்த்து பிசறி 2-3 மணி நேரம் ஊறவைத்து
  47. பின் எண்ணெய் காய்ந்ததும் பொறித்தெடுக்கவூம்.
  48. மிதமான தீயீல் 7-10 நிமிடம் வேந்ததும். எண்ணெயை வடித்து இறக்கி சீறிது பொறிந்த கறிவேப்பில்லை சேர்த்தால்
  49. சிக்கன் 65 தயார்.
  50. பின் கோழி சாப்ஸ் செய்ய மண்சட்டியில் 4தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சிறிது சேர்த்து வதக்கவும்.
  51. பின் 1 நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின் சிறிது வெங்காய விழுது சேர்க்கவும்.
  52. சிறிது இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி மிளகாய் பொடி,மஞ்சள் பொடி,கரம்மசாலா பொடி,சோம்பு பபொடி,சீரகப் பொடி சேர்த்து வதக்கவும்.
  53. உப்பு, மிளகுதூள் சேர்த்து கிளறி கழுவிய கோழிகறி சேர்த்து சிறிது ததண்ணீர் சேர்த்து 4-5 நிமிடம் வேகவிடவும்.
  54. பின் சிறிது தேங்காய் விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். சுருண்டு சாப்ஸ் வந்ததும் கொத்து மல்லி இலை சேர்த்து இறக்கினால் கோழிச்சாப்ஸ் தயார்.
  55. ஒரு வாழையிலையில் அனைத்தையும் வந்த மப்பிளை,பொன்னுக்கு அன்புடன் பரிமாறுவது "மண்பானை மாப்பிளை கறி விருந்

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
May-21-2018
Vasuyavana   May-21-2018

It's a big task

Waheetha Azarudeen
May-14-2018
Waheetha Azarudeen   May-14-2018

Awesome dear

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்