வீடு / சமையல் குறிப்பு / மட்டன் குழம்பு

Photo of Mutton curry by jeyaveni chinniah at BetterButter
312
4
0.0(0)
0

மட்டன் குழம்பு

May-14-2018
jeyaveni chinniah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் குழம்பு செய்முறை பற்றி

ஊர் மணத்துடன் சுவையான மட்டன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன்-1 கி
  2. நீளமாக நறுக்கிய வெங்காயம்-1
  3. நறுக்கிய தக்காளி-1
  4. பச்சை மிளகாய்-2
  5. இஞ்சி பூண்டு விழுது-2ஸ்பூன்
  6. எலுமிச்சை சாறு-1 ஸ்பூன்
  7. மல்லி தூள் -2 ஸ்பூன்
  8. மிளகாய்த்தூள் -4 ஸ்பூன்
  9. தேங்காய் சிறிதளவு
  10. பெருஞ்சீரகம்-1 ஸ்பூன்
  11. ஏலக்காய்-2
  12. கிராம்பு-2
  13. முந்திரி பருப்பு-5
  14. பட்டை-1துண்டு
  15. கறிவேப்பிலை சிறிது
  16. உப்பு தேவையான அளவு
  17. எண்ணெய் தேவையான அளவு
  18. அண்ணாசி பூ-1
  19. கொத்தமல்லி தழை

வழிமுறைகள்

  1. மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்
  2. தேங்காய் ,சோம்பு ,முந்திரி பருப்பு, ஏலக்காய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை ,பெருஞ்சீரகம், கிராம்பு ,அண்ணாசி பூ சேர்க்கவும்
  4. பின்னர் வெங்காயம், மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  6. பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்
  7. மட்டன் மிளகாய் தூள் ,மல்லி தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
  8. இரண்டு கப் தண்ணீர் சேர்த்து 9 விசில் விடவும்
  9. விசில் அடங்கிய பின் தேங்காய் கலவை ,கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
  10. காரம் தேவை என்றால் தேங்காய் சேர்க்கும் முன் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
  11. இறுதியில் எலுமிச்சை சாறு கலந்து சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்