வீடு / சமையல் குறிப்பு / மீன் குழம்பு

Photo of Fish Curry by விருதை சமையல் at BetterButter
454
4
0.0(0)
0

மீன் குழம்பு

May-14-2018
விருதை சமையல்
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மீன் குழம்பு செய்முறை பற்றி

மீன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மீன் - 1/2 கிலோ
  2. சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
  3. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
  4. புளி - எலுமிச்சை அளவு
  5. மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
  6. உப்பு - தேவையான அளவு
  7. நல்லெண்ணெய் - 5 தேக்கரண்டி
  8. அரைக்க:
  9. சின்ன வெங்காயம் - 8
  10. சீரகம் - 2 தேக்கரண்டி
  11. காய்ந்த மிளகாய் - 7
  12. தேங்காய்சில் - 1

வழிமுறைகள்

  1. உங்களுக்கு பிடித்த மீனை வாங்கி  நன்கு கழுவிக் கொள்ளவும்.
  2. புளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்துவைத்துக் கொள்ளவும்.
  3. வெங்காயம்,  தேங்காய்சில், சீரகம், காய்ந்த மிளகாய்  ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு மை போல் அரைத்துக் கொள்ளவும்.
  4. கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  6. தக்காளி வதங்கியதும் அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுது, மஞ்சள் பொடி, புளிக்கரைசல், மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விடவும்.
  7. பின் அதில் மீன் துண்டுகளை சேர்த்து  மீன் நன்கு வெந்து குழம்பில் இருந்து எண்ணெய் தனியே பிரியும் போது    இறக்கவும்.
  8. சுவையான மீன் குழம்பு தயார்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்