வீடு / சமையல் குறிப்பு / மட்டன் கோலா உருண்டை

Photo of Mutton Kola Urundai by Menaga Sathia at BetterButter
318
2
0.0(0)
0

மட்டன் கோலா உருண்டை

May-14-2018
Menaga Sathia
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மட்டன் கோலா உருண்டை செய்முறை பற்றி

மிகவும் சுவையான ரெசிபி இது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மட்டன் கீமா -1/4 கிலோ
  2. பொட்டுக்கடலை -3/4 கப்
  3. துருவிய தேங்காய் -1/2 கப்
  4. எண்ணெய் -பொரிக்க
  5. உப்பு -தேவைக்கு
  6. வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
  7. பச்சை மிளகாய் -3,பொடியாக நறுக்கியது
  8. வரமிளகாய்தூள் -1 டீஸ்பூன்
  9. தனியாதூள் -3/4 டீஸ்பூன்
  10. முட்டை -1
  11. பட்டை - 1" அளவு
  12. ஏலக்காய் -2
  13. கல்பாசி -1/2 டீஸ்பூன்
  14. கிராம்பு -3
  15. இஞ்சி -1 டீஸ்பூன், நறுக்கியது
  16. பூண்டுப்பல் -2
  17. சோம்பு -1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் கீமாவை சுத்தம் செய்து,நீரை வடிக்கவும். ஒரு கடாயில் அதனை சேர்த்து நன்கு டிரையாக வரும் வரை வதக்கவும்.
  2. பொட்டுக்கடலையை பவுடராக்கவும்.கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.
  3. வெறும் கடாயில் பட்டை,கிராம்பு, ஏலக்காய், கல்பாசி சேர்த்து வறுத்து பொடிக்கவும்.
  4. பின் வேகவைத்த கீமாவுடன்,தேங்காய் துறுவல், சோம்பு ,இஞ்சி, பூண்டு சேர்த்து அரைக்கவும்.
  5. ஒரு பவுலில் அரைத்த கீமா,வத்க்கிய வெங்காய மசாலா, உப்பு,முட்டை,பொட்டுகடலைமாவு,மிளகாய்தூள், தனியாதூள்,பொடித்த பொடி சேர்க்கவும்.
  6. நன்றாக அனைத்தையும் கலந்து எலுமிச்சையளவு உருண்டையாக்கவும்.
  7. எண்ணெய் காயவைத்து உருண்டைகளை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
  8. சூடாக புதினா சட்னியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்