வீடு / சமையல் குறிப்பு / குதிரை வாலி அரிசி இனிப்பு பொங்கல்

Photo of Barnyard millet sweet pongal by Fathima Beevi at BetterButter
742
3
0.0(0)
0

குதிரை வாலி அரிசி இனிப்பு பொங்கல்

May-16-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

குதிரை வாலி அரிசி இனிப்பு பொங்கல் செய்முறை பற்றி

குதிரை வாலி அரிசி இனிப்பு பொங்கல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. குதிரைவாலி அரிசி- 3/4 கப்
  2. பாசிப்பருப்பு - 1/4 கப்
  3. வெல்லம் -1 கப்
  4. உப்பு- 1 சிட்டிகை 
  5. நெய்  - 2 டேபிள் ஸ்பூன்
  6. ஏலக்காய் - 2
  7. முந்திரிப்பருப்பு - 10
  8. உலர் திராட்சை -10
  9. தண்ணீர்  - 1/4 கப்- வெல்லத்தை கரைப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி பாசிப்பருப்பை நன்கு பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுக்கவும்.
  2. குதிரைவாலி அரிசியை நன்கு கழுவி அதை வறுத்த பாசிப்பருப்பு, ஒரு சிட்டிகை உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வரை வைக்கவும்
  3. வெல்லத்தை நன்கு பொடித்து மிதமான சூட்டில் உள்ள தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
  4. நன்கு கரைந்த பின்பு வடிகட்டி, வடிகட்டிய கரைசலை வேக வைத்த குதிரை வாலி அரிசியுடன் மிதமான சூட்டில்  பொங்கல் பதம் வரும் வரை நன்கு கிளறவும்.
  5. மற்றொரு வாணலியில் மீதமுள்ள நெய் ஊற்றி முந்திரிப்பருப்பு, ஏலக்காய், உலர் திராட்சை இட்டு நன்கு பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து பொங்கலுடன் சேர்த்து கிளறவும்.
  6. சுவையான குதிரை வாலி அரிசி இனிப்பு பொங்கல் தயார்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்