Photo of Fish Kuzhambu by Jayasakthi Ekambaram at BetterButter
695
2
0.0(1)
0

Fish Kuzhambu

May-16-2018
Jayasakthi Ekambaram
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சங்கரா மீன் 500 கிராம்
  2. சின்ன வெங்காயம் 6
  3. தோலுடன் பூண்டு பற்கள் 6
  4. கருவேப்பிலை 8 கொத்து
  5. தக்காளி 2
  6. குழம்பு மிளகாய் தூள் 6 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
  8. கல் உப்பு 2 ஸ்பூன்
  9. நல்லெண்ணெய் 4 ஸ்பூன்
  10. கடுகு 1 ஸ்பூன்
  11. சீரகம் 1/2 ஸ்பூன்
  12. வெந்தயம் 1/4 ஸ்பூன்
  13. புளி பெரிய எலுமிச்சை அளவு

வழிமுறைகள்

  1. மீன்களை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து நன்றாக அலசி வைக்கவும்.
  2. வெங்காயம், பூண்டு பற்கள், கருவேப்பிலை இவை மூன்றும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  3. தக்காளியையும் தனியாக அரைத்து கொள்ளவும்.
  4. புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
  5. அதில் மிளகாய் தூள் , உப்பு சேர்த்து கொள்ளவும்.
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சுடாக்கவும்.
  7. எண்ணெய் காய்ந்ததும் கடுகு போடவும்.
  8. கடுகு வெடித்ததும் சீரகம், வெந்தயம் சேர்த்து பொரிய விடவும்.
  9. வெங்காய அரவையை சேர்த்து வதக்கவும்.
  10. அது பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
  11. மிளகாய் தூள் கலந்து வைத்த புளி கரைசலை சேர்க்கவும்.
  12. நன்றாக கொதிக்க விடவும்.
  13. 10 நிமிடங்கள் கொதிக்க விட்டு மீன்களை சேர்த்து விடவும்.
  14. வாணலியை மூடி வைத்து சிறிய தீயில் 5 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Murugeshwari Subramaniyan
Dec-23-2018
Murugeshwari Subramaniyan   Dec-23-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்