வீடு / சமையல் குறிப்பு / நாட்டுக்கோழி முருங்கக்காய் குழம்பு

Photo of Country chicken with drumstick by khadheeja irfana at BetterButter
311
2
0.0(0)
0

நாட்டுக்கோழி முருங்கக்காய் குழம்பு

May-16-2018
khadheeja irfana
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நாட்டுக்கோழி முருங்கக்காய் குழம்பு செய்முறை பற்றி

கிராமிய மணத்துடன் கூடுதல் சுவையுடன் செய்யக்கூடிய அருமையான முருங்கக்காய் சேர்த்த நாட்டுக்கோழி குழம்பு.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தாளிக்க தேவையான பொருட்கள்
  2. தேங்காய் எண்ணெய் 3 அல்லது 4 மேஜைக்கரண்டி
  3. நெய் 2 மேஜைக்கரண்டி
  4. பட்டை 2 துண்டு
  5. ஏலக்காய்-3
  6. கிராம்பு-3
  7. ரம்பை இலை -1
  8. கருவா பிள்ளை சிறு கொத்து
  9. வெங்காயம் ஒன்று
  10. இஞ்சி பூண்டு விழுது இரண்டு மேசைக்கரண்டி
  11. தயிர் 2 மேஜைக்கரண்டி
  12. தக்காளி ஒன்று
  13. பச்சை மிளகாய் 3
  14. நாட்டுக் கோழி அரை கிலோ
  15. மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
  16. மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
  17. மல்லித்தூள் ஒரு தேக்கரண்டி
  18. சீரக தூள் அரை தேக்கரண்டி
  19. சோம்பு தூள் அரை தேக்கரண்டி
  20. உப்பு சுவைக்கேற்ப
  21. அரைத்த தேங்காய் விழுது ஒரு மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு சட்டியில் தேங்காய் எண்ணெய், நெய் சேர்த்து காய்ந்ததும் அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து பொரிய விடவும்.
  3. அதன் பின் ரம்ப இலை ,வெங்காயம், கருவாபிள்ளை சேர்த்து வதக்கவும்.
  4. பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பொரிய விடவும்.
  5. அதோடு தயிர் சேர்த்து பொரிய விடவும்.
  6. பின்னர் மசாலா பொடி வகைகளை சேர்த்து வதக்கவும்.
  7. அதோடு சுத்தம் செய்து வைத்த நாட்டு கோழியை நன்றாக பிரட்டி விடவும்.
  8. பின்னர் தக்காளி,பச்சை மிளகாயை முருங்கக்காய் சேர்க்கவும்.
  9. எல்லாம் நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  10. குழம்பிற்கு தேவையான தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
  11. பின்னர் அரைத்து வைத்த தேங்காய் விழுது சேர்த்து வேகவிடவும்.
  12. நாட்டு கோழி,முருங்கைகாய் நன்றாக வெந்ததும் அடுப்பை அனைக்கவும்.
  13. கிராமிய மணமும் சுவையும் கொண்ட நாட்டுகோழி முருங்கைகாய் குழம்பு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்