வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் ஸ்பான்ஜ் கேக்

Photo of chicken sponge cake by hajirasheed haroon at BetterButter
374
5
0.0(0)
0

சிக்கன் ஸ்பான்ஜ் கேக்

May-16-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் ஸ்பான்ஜ் கேக் செய்முறை பற்றி

வித்தியாசமானது எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஸ்டபிங் செய்ய
  2. எலும்புகள் இல்லாத சிக்கன் துண்டுகள் 100gm
  3. பெரிய வெங்காயம் 1
  4. பூண்டு 3
  5. இஞ்சி 1துண்டு
  6. கொத்தமல்லி இலை
  7. மஞ்சள்தூள் 1பின்ச்
  8. மிளகாய்தூள் 2ஸ்பூன்
  9. கரம்மசாலாதூள் 1ஸ்பூன்
  10. உப்பு
  11. எண்ணெய்
  12. கேக் மாவு தயாரிக்க தேவையான பொருள்கள்
  13. முட்டை 2
  14. பால் 1/4 டம்ளர்
  15. சன்ப்ளவார் ஆயில் 1/4 கப்
  16. உப்பு 1பின்ச்
  17. மைதாமாவு 1௧ப்
  18. மஞ்சள்தூள் 1பின்ச்
  19. அலங்கரிக்க
  20. கொடைமிளகாய் கேரட் கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கி கொள்ளவும்

வழிமுறைகள்

  1. சிக்கன் ஸ்ட்டபிங் செய்ய
  2. சிக்கனை சிறிது உப்பு மஞ்சள்தூள் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
  3. வெங்காயம்,பூண்டு,இஞ்சி இவைகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு இஞ்சி சேர்த்து வதக்கி அடுத்து வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும் பொன்னிறமாக மாறியதும் அதில் வேக வைத்த சிக்கன் மசாலா தூள்கள் கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி ஆற விடவும்
  5. கேக் மாவு செய்ய
  6. ஒரு மிக்சி ஜாரில் இரண்டு முட்டைகளை சேர்த்து அடிக்கவும் அதில் அடுத்து அடுத்து எண்ணெய் மைதாமாவு பால் உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து அடிக்கவும் மாவு ரெடி
  7. கேக் செய்ய தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடு செய்யவும் ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதில் அடித்து வைத்துள்ள மாவில் சிறிது ஊற்றி தோசை தவாவின் மேல் வைத்து மூடி,விடவும்
  8. 5நிமிடம் கழித்து அதில் செய்து வைத்துள்ள சிக்கன் கலவையை சேர்த்து மீதமுள்ள,மாவை அதன்,மேலே ஊற்றி கேரட் கொடைமிளகாய் கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கி தூவி விடவும் , 10நிமிடம் வேக விட்டு மற்றொரு தட்டில் மாற்றி பரிமாறலாம் சூடாக சாப்பிட நல்லா இருக்கும்
  9. மாலை நேர ஸ்நாக்ஸாகவும் கொடுக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்