Photo of Crispy chicken pakora by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
585
6
0.0(2)
0

Crispy chicken pakora

May-18-2018
Wajithajasmine Raja mohamed sait
130 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Crispy chicken pakora செய்முறை பற்றி

கிரிஸ்பி சிக்கன் பக்கோடா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. எலும்பு இல்லாத சிக்கன்- 200 கிராம்
  2. வெங்காயம் -1 நீளமாக நறுக்கியது
  3. பச்சை மிளகாய் -2 பொடியாக நறுக்கியது
  4. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
  6. மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
  7. கரம் மசாலா தூள் -1/2 தேக்கரண்டி
  8. கடலை மாவு -2 தேக்கரண்டி
  9. அரிசி மாவு - 1 தேக்கரண்டி
  10. மைதா - தேக்கரண்டி
  11. கருவேப்பிலை - சிறிதளவு
  12. மல்லி இலை - சிறிதளவு
  13. உப்பு - தேவையான அளவு
  14. எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் சிக்கனை நன்கு கழுவி பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  3. பொடியாக நறுக்கிய சிக்கனுடன் நறுக்கிய வெங்காயம் ,பச்சை மிளகாய் ,மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,கரம் மசாலா தூள்,இஞ்சி பூண்டு விழுது,கருவேப்பிலை ,மல்லி இலை சிறிதளவு உப்பு ,சேர்த்து நன்கு பிசைந்து 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
  4. 2 மணி நேரம் கழித்து ஊற வைத்த சிக்கனுடன் கடலை மாவு ,அரிசி மாவு,மைதா மாவு ,தேவையான அளவு உப்பு சேர்த்து பிசையவும்.இப்பொழுது சிக்கன் பக்கோடா செய்ய மாவு தயார்.
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறிது சிறிதாக எண்ணெய்யில் போட்டு பொரிக்கவும்.
  6. இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து கோல்டன் ப்ரவுனாக வந்ததும் எண்ணெய்யில் இருந்து எடுக்கவும்.
  7. சுவையான கிரிஸ்பியான சிக்கன் பக்கோடா தயார்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Priya Mohan
May-19-2018
Priya Mohan   May-19-2018

Rahumath Nisha
May-19-2018
Rahumath Nisha   May-19-2018

Spicy comes tasty

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்