Photo of Pepper fish fry by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
611
7
0.0(3)
0

Pepper fish fry

May-18-2018
Wajithajasmine Raja mohamed sait
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • பான் பிரை
  • ஸ்டீமிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வஞ்சரம் மீன் -250 கிராம்
  2. வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது
  3. பச்சை மிளகாய் -1
  4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
  6. மிளகாய் தூள்-1/2 தேக்கரண்டி
  7. மிளகு தூள்-1/2 தேக்கரண்டி
  8. நெய் -2 தேக்கரண்டி
  9. எண்ணெய் -2 தேக்கரண்டி
  10. மல்லி இலை - சிறிதளவு
  11. உப்பு - தேவையான
  12. வாழை இலை - 1 சிறியது
  13. பொடி செய்ய தேவையான பொருட்கள் :
  14. சீரகம்-1/2 தேக்கரண்டி
  15. பெருஞ்சீரகம் -1/2 தேக்கரண்டி
  16. மல்லி - 1/2 தேக்கரண்டி
  17. மிளகு -1 தேக்கரண்டி
  18. வரமிளகாய் -1 -2

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் மீனை நன்கு கழுவி தோல்,முள் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.பின்பு அதனுடன் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும் .
  3. இப்பொழுது இந்த மீனை ஒரு சிறிய வாழை இலையில் வைத்து மடித்துக்கொள்ளவும் .
  4. பின்பு மடித்து வாழை இலையை இட்லி பாத்திரத்தில் வைத்து 8-10 நிமிடங்கள் வேக வைத்துக்கொள்ளவும்.
  5. 10 நிமிடங்கள் கழித்து இலையில் இருந்து வெந்த மீனை எடுக்கவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து பொடி செய்ய தேவையான பொருட்களை வறுத்து எடுக்கவும் .
  7. பின்பு அதை மிக்சியில் சேர்த்து பொடியாக்கக்கொள்ளவும் .
  8. அடுப்பில் கடாயை வைத்து 2 தேக்கரண்டி நெய் ,2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் .
  9. வெங்காயம் நன்கு வதங்கியதும 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் .
  10. இப்பொழுது மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து வதக்கி அதனுடன் அரைத்த பொடியை சேர்த்து நன்கு வதக்கவும் .
  11. பின்பு இதனுடன் வேக வைத்த மீனை சேர்த்து மீன் உடையாமல் வதக்கவும் .
  12. மீன் மசாலாவுடன் நன்கு மிக்ஸ் ஆகும் வரை கிளறவும் .தேவை எனில் உப்பு சேர்த்துக்கொள்ளவும். .இறுதியில் சிறிதளவு மிளகு தூள்,மல்லி இலை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
  13. இப்பொழுது சுவையான மீன் மிளகு வறுவல் தயார்.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
May-20-2018
Pushpa Taroor   May-20-2018

Super

Priya Mohan
May-19-2018
Priya Mohan   May-19-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்