Photo of Fish balls / Fish kola urundai by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
996
8
0.0(4)
0

Fish balls / Fish kola urundai

May-18-2018
Wajithajasmine Raja mohamed sait
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வஞ்சரம் மீன் - 250 கிராம்
  2. வெங்காயம் -1
  3. பச்சை மிளகாய் -2
  4. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  5. பெருஞ்சீரகம் -1 தேக்கரண்டி
  6. உருளைக்கிழங்கு -1 வேக வைத்தது
  7. மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
  9. கரம் மசாலா -1/2 தேக்கரண்டி
  10. தேங்காய் - சிறிய துண்டு 1
  11. பொரிகடலை-2 தேக்கரண்டி
  12. முந்திரி -7
  13. கார்ன் பிளார் -2 தேக்கரண்டி
  14. மல்லி இலை - சிறிதளவு
  15. கருவேப்பிலை -சிறிதளவு
  16. வாழை இலை - 1 சிறியது
  17. உப்பு -தேவையான அளவு
  18. எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் மீனை நன்கு கழுவி அதனுடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள் ,கரம் மசாலா தூள்,உப்பு சேர்த்து மிக்ஸ் செய்யவும் .
  3. பின்பு மீனை வாழை இலையில் வைத்து மடித்து இட்லி பாத்திரத்தில் 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  4. இப்பொழுது மீனை இலையில் இருந்து எடுத்து தோல்,முள்ளை நீக்கி எடுத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பெருஞ்சீரகம் ,பொரிகடலை,நறுக்கிய வெங்காயம் ,முந்திரி ,பச்சை மிளகாய் ,இஞ்சி பூண்டு விழுது தேங்காய் துண்டு ,கருவேப்பிலை ,மல்லி இலை,இவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி இறுதியாக மிளகாய் தூள்,உப்பு சேர்த்து வதக்கி ஆறவிடவும் .
  6. ஆறிய பின்பு மிக்சியில் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும் .
  7. வேகவைத்த மீனையும் மிக்சியில் ஒரு முறை இலேசாக அரைத்துக்கொள்ளவும் .
  8. இப்பொழுது அரைத்த மசாலாவுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  9. பின்பு இதனுடன் அரைத்த மீன்,கார்ன் பிளார், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
  10. மீன் கோலா உருண்டை செய்வதற்கு மாவு தயார்.
  11. மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும் .
  12. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை போட்டு பொரிக்கவும்
  13. இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து கோல்டன் ப்ரவுனாக மாறியதும் எண்ணெய்யில் இருந்து எடுக்கவும்
  14. இப்பொழுது சுவையான மொரு மொருப்பான மீன் கோலா உருண்டை தயார்.

மதிப்பீடு (4)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
May-20-2018
Pushpa Taroor   May-20-2018

Good

Priya Mohan
May-19-2018
Priya Mohan   May-19-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்