வீடு / சமையல் குறிப்பு / தந்தூரி சிக்கன் இன் அவன்

Photo of TANDOORI chicken in oven by Priyadharshini Selvam at BetterButter
626
3
0.0(0)
0

தந்தூரி சிக்கன் இன் அவன்

May-19-2018
Priyadharshini Selvam
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தந்தூரி சிக்கன் இன் அவன் செய்முறை பற்றி

வீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன் - 1/2 கிலோ கால் பகுதி
  2. ஊற வைப்பதற்கு:
  3. தயிர் - 1 கப்
  4. வெங்காயம் - 1
  5. எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
  6. பூண்டு - 2 பற்கள்
  7. இஞ்சி - 1 துண்டு
  8. பச்சை மிளகாய் - 2
  9. கரம் மசாலா - 2 டீஸ்பூன்
  10. எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
  11. உப்பு - தேவையான அளவு
  12. கேசரி பவுடர் - 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி, துணியில் கட்டி நன்கு உலர வைத்துக் கொள்ள வேண்டும்
  2. சிக்கன் துண்டுகளை கத்தி கொண்டு ஆங்காங்கு கீறி விட வேண்டும்
  3. பின்னர் எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து, அதில் சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு பிரட்டி 20 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  4. பிறகு மிக்ஸியில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கரம் மசாலா சேர்த்து நன்கு கெட்டியான பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்
  5. பின்பு அதனை சிக்கனுடன் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். பின் அதில் கேசரி பவுடர் சேர்த்து நன்கு பிரட்டி, 30-40 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  6. அடுத்து 180℃ முற்சூடு செய்யப்பட்ட அவனில் ஒரு கிரில் ட்ராய் வைத்து அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை வைத்து, மேலே சிறிது எண்ணெய் தடவி 25 நிமிடம் வைத்து வேக வைக்க வேண்டும்.
  7. பின் திறந்து சிக்கனை மறுபக்கம் திருப்பி விட்டு 10-15 நிமிடம் மீண்டும் வேக வைத்து இறக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து சிக்கனையும் வேக வைக்க வேண்டும். இப்போது தந்தூரி சிக்கன் ரெடி!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்