வீடு / சமையல் குறிப்பு / கிராமத்து கோழி சூப்

Photo of VILLAGE style chicken soup by Priyadharshini Selvam at BetterButter
516
3
0.0(0)
0

கிராமத்து கோழி சூப்

May-19-2018
Priyadharshini Selvam
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கிராமத்து கோழி சூப் செய்முறை பற்றி

சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சிக்கன் சூப் வைத்து குடிக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழி(எலும்புடன்) - 1/2  கிலோ
  2. சின்ன வெங்காயம் - 50 கிராம்
  3. பூண்டு - 5 பல்
  4. இஞ்சி - 1  துண்டு
  5. தக்காளி - 1
  6. பட்டை, லவங்கம் - தலா 1
  7. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
  8. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
  9. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
  10. தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
  11. பச்சை மிளகாய் - 1
  12. மஞ்சள்தூள் - 1 /2  தேக்கரண்டி
  13. உப்புதேவையான அளவு
  14. எண்ணெய் - தேவையான அளவு
  15. எலுமிச்சை சாறு - தேவைக்கு
  16. கொத்தமல்லி தழை - சிறிதளவு

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். இஞ்சி, கொத்தமல்லி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  2. தக்காளி, ப.மிளகாய், சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கி கொள்ளவும்.
  3. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். 
  4. அடுத்து அதில் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, 6 விசில் வரும் வரை வேக விடவும்.
  5. பின்பு இநத் சிக்கன் சூப்பில் கொத்தமல்லி, எலுமிச்சைசாறு பிழிந்து பரிமாறவும். சூப்பரான கிராமத்து ஸ்டைல் சிக்கன் சூப் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்